”என் ஸ்கின் டோன்னால நிறைய பிரச்னைகளை சந்திச்சிருக்கேன்” – கண்ணம்மாவின் கலக்கல் ஃபோட்டோஸ்!

Roshni Haripriyan: நான் கலரா இல்லைங்குறதை விட நாம அழகா இல்லைங்குற உணர்வு எனக்குள்ளே இருந்துச்சு.

By: November 5, 2019, 11:57:56 AM

Bharathi Kannamma Serial: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு, சின்னத்திரை ரசிகர்களின் ஆதரவு பலமாக உள்ளது. இதில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில், நடிப்பவர் ரோஷினி ஹரிபிரியன். மாமியாருக்கு கறுப்பு என்றாலே பிடிக்காது. ’வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போல, சிவப்பு நிறத்தில் அழகாக இருப்பவர்கள் தான் நல்லவர்கள், நாலும் தெரிந்தவர்கள் என்பது கண்ணம்மா மாமியாரின் எண்ணம். ஆனால், வீட்டின் மூத்த மருமகள் கண்ணம்மாவோ கறுப்பு நிறம், அதனால் மாமியார் செளந்தர்யாவுக்கு அவர் ஆகவே ஆகாது.

சரி, இது ஒருபுறமிருக்கட்டும். கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நோட்டம் விட்டோம்.

Roshini Haripriyan, Bharathi Kannamma “நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். காலேஜ் முடிஞ்சதும் ஐடி கம்பெனியில் இரண்டு வருஷமா வேலை பார்த்துட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் இது நமக்கான இடம் இல்லைன்னு தெரிஞ்சது உடனே அந்த வேலையை விட்டுட்டு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன்” என்கிறார் ரோஷினி. Roshini Haripriyan, Bharathi Kannamma சின்ன வயசுல இருந்தே மாடலிங் பண்ணனும் என்கிற ஆசை இருந்துச்சு. ஆனா, நான் கொஞ்சம் டஸ்க்கி ஸ்கின்ல இருப்பேன். சின்ன வயசுல இருந்தே கலரா இருக்கிறவங்களால் மட்டும்தான் இதெல்லாம் பண்ண முடியும்னு எல்லோரும் நினைக்கிற மாதிரி நானும் நினைச்சிட்டு இருந்தேன். Roshini Haripriyan, Bharathi Kannamma என்னுடைய ஸ்கின் டோன் நிறைய பேருக்கு பிடிச்சிருந்தது. என்னைத் தேடி ஃபோட்டோஷூட் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இந்த மாதிரி ஸ்கின் டோன் உள்ளவங்களை மையமா வைச்சு ஒரு சீரியல் எடுக்கிறோம்னு எனக்கு டைரக்டர் கிட்ட இருந்து ஃபோன் வந்தது. Roshini Haripriyan, Bharathi Kannamma முன்னாடி நான் நடிச்சதே இல்ல.. எப்படி சாத்தியம்னு கொஞ்சம் யோசிச்சேன். டைரக்டர் பிரவீன் சார் தான் எனக்குள்ள ஒரு நம்பிக்கை கொடுத்தார். என்னால முடியும்னு என்னை விட அவர் நம்பினார். அவர் சொல்லிக் கொடுக்கிறதை ஸ்கிரீன்ல வெளிப்படுத்துறேன். Roshini Haripriyan, Bharathi Kannamma எங்க ஃபேமிலியில் யாரும் மீடியா ஃபீல்டில் இல்லை. அதனால அவங்களுக்குள்ளே ஒரு வித பயம் இருந்துச்சு. இப்போ நான் பண்றதை பார்த்துட்டு சரி, நம்ம பொண்ணு சூப்பரா பண்றான்னு மனசு மாறிட்டாங்க. Roshini Haripriyan, Bharathi Kannamma நான் படிச்சது ஆங்கிலோ இந்தியன் ஸ்கூல். அங்கே என்னுடைய நிறத்தினால் நிறைய விஷயங்களை எதிர்கொண்டிருக்கிறேன். அதே மாதிரி காலேஜிலும் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்திச்சிருக்கேன். Roshini Haripriyan, Bharathi Kannamma நாம கறுப்பா இருக்கோம்ன்னு மனசளவுல நானே டவுணா ஃபீல் பண்ணியிருக்கேன். நான் கலரா இல்லைங்குறதை விட நாம அழகா இல்லைங்குற உணர்வு எனக்குள்ளே இருந்துச்சு. காலேஜ் விட்டு வெளி உலகத்துக்கு வரும்போது என்னை நானே மாத்திக்க ஆரம்பிச்சேன். Roshini Haripriyan, Bharathi Kannamma என்று சொல்லும் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியலில் நான் டார்க் மேக்கப் போட்டு நடிப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் என்னுடைய ஒரிஜினல் நிறம் தான் அது என்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Roshni haripriyan photo gallery bharathi kannamma serial vijay tv

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X