ஆமாப்பு 50கோடிப்பு - ரவுடி பேபி பாட்டை அம்புட்டு தடவ பாத்துருக்காங்க!!!

சிறுகுழந்தைகளும் பாடும் அளவிற்கு, இந்த பாடல் அவர்களின் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை

சிறுகுழந்தைகளும் பாடும் அளவிற்கு, இந்த பாடல் அவர்களின் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhanush, saipallavi, maari2, rowdybaby song, record, trending,தனுஷ், சாய்பல்லவி, மாரி2, ரவுடிபேபி சாங், சாதனை, டிரெண்டிங்

dhanush, saipallavi, maari2, rowdybaby song, record, trending,தனுஷ், சாய்பல்லவி, மாரி2, ரவுடிபேபி சாங், சாதனை, டிரெண்டிங்

தனுஷ், சாய் பல்லவியின் அசத்தலான நடன அமைப்பில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ரவுடி பேபி பாடலை, இதுவரை 50 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதாக தனுஷ் ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.

Advertisment

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் உருவான படம் மாரி படம் 2015ல் வெளிவந்தது. பாடல்கள் ஹிட் ஆயின. படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்று ஏதும் இல்லாததால், மக்களிடையே வரவற்பை மாரி படம் பெறவில்லை. இந்நிலையில், மாரி 2 படம் வரப்போவதாக செய்திகள் வெளியாயின. ஹிட் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாவது இயல்பு. சுமாரான படத்திற்கு இரண்டாவது பாகமா என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

2018ல் திட்டமிட்டபடி, மாரி 2 படம் வெளியானது. படத்தின் முதல்பாகத்தில் இருந்த காஜல் அகர்வாலிற்கு பதிலாக சாய் பல்லவி இந்த படத்தில் நடித்திருந்தார். படம், மாரி படத்தை விட சுமாராக இருந்ததாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

தனுஷ். சாய் பல்லவியின் அட்டகாச நடனத்தில் உருவான ரவுடி பேபி பாட்டு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. சிறுகுழந்தைகளும் பாடும் அளவிற்கு, இந்த பாடல் அவர்களின் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.

Advertisment
Advertisements

இந்த பாடல், டிவி, ரேடியோ, மொபைல், லேப்டாப் என அனைத்து சாதனங்களிலும் நீக்கமற ஒலித்தது. அந்த அளவிற்கு இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் இந்த பாடல் கவர்ந்திருந்தது.

அதிக நாட்கள் டுவிட்டர் டிரெண்டிங்கிலும் இருந்தது. இந்த பாடல் 50 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள முதல் பாடல். தனுஷின் திரைவரலாற்றில் இது மணிமகுடம் என்று தனுஷ் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வெளியிட்டுள்ளனர்.

Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: