பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது குடும்பத்துடன் தூத்துக்குடி சுற்றுலா சென்றுள்ளார்
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக எஸ்.எஸ்.ராஜமௌலி தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
2001-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தொடர்ந்து பல படங்களை இயக்கிய அவர், நான் ஈ படத்தின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். அதன் பிறகு பிரபாஸ் ராணா நடிப்பில் பாகுபலி 1 மற்றும் 2, ராம்சரன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறினார்.
இதனிடையே கடைசியாக இவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜமௌலி அடுத்து இயக்கும் படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Advertisment
Advertisement
சினிமா பிரபலங்கள் தங்கள் விடுமுறை தினத்தை கழிப்பதற்காக வெளிநாடு சுற்றுலா செல்வது வழக்கமான ஒன்று. ஆனால் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி வித்தியாசமாக தனது மனைவி ரமா, மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா மருமகள் பூஜா மற்றும் மகள் மயூகா ஆகியோருடன், தமிழகத்தின் தூத்துக்குடியில் சுற்றுலா சென்றுள்ளார். இங்கு ஒரு ரிசார்ட்டில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட ராஜமௌலி தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் தங்களின் வருகையை நினைவுபடுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், அற்புதமாக மிகவும் அடக்கமான நாள். இன்றைய நாளில் குடுமபத்தினருடன் மரக்கன்றுகளை நட்டேன். இந்த வாரத்தின் அற்புதமான ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பிரபல தொகுப்பாளிகளில் ஒருவரான அனைனா ராஜமௌலியின் மனைவியும் காஸ்ட்யூம் டிசைனருமான ரமாவைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இதில் “ரமா அத்தையைப் பற்றி தெரிந்துகொள்வது, என் அத்தைகளில் ஒருவர் வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்கள் அன்புக்கும், மரியாதைக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமெளலி அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) பேசிய ராஜமௌலி இந்த படம் "ஒரு உலகளாவிய அதிரடி-சாகச படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“