Advertisment

சென்னை பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன ஃபிலிம் சிட்டி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கலைஞர் 100’ விழாவில் அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
CM Film city.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா  ‘கலைஞர் 100’ என்ற பெயரில்  நேற்று (ஜன.6) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், நடிகர்கள், ரஜினி, கமல், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர். 

Advertisment

தொடர்ந்து விழாவில் பேசிய ஸ்டாலின், “பல்வேறு அமைப்புகள் இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  பெற்றோர் வைத்த பெயரை கூட கூப்பிடாமல் ‘கலைஞர்’ என்று தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் கருணாநிதி. அவர் மறைந்த போது தமிழ்நாடே கலங்கி நின்றது.

இந்த அரசு திரைத் துறையினருக்கு பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டு இருக்கிறது. பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைய உள்ளது. ரூ.25 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் மேம்படுத்தப்படும். 4 படப்பிடிப்பு தளங்களுடன் எம்.ஜி.ஆர்  ஃபிலிம் சிட்டி புரொடக்சன், போஸ்ட்  புரொடக்சன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் 5 ஸ்டார் ஓட்டல் வசதி உடன் அமைக்கப்பட உள்ளன" என ஸ்டாலின் தெரிவித்தார்.  

CM Film city1.jpg

தொடர்ந்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை! பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது கலைஞர் எனும் அடைமொழிதான். 

'தலைவர்' என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் 'கலைஞர்' என்பதைத்தான். கலையுலகுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் இருந்த உறவுக்கு அப்பெயரே சிறந்த சான்று. 

"Art should comfort the disturbed and disturb the comfortable" என்ற வரிக்கேற்பத் தம் படைப்புகளில் எல்லாம் அரசியலை நுழைத்து, சமூக இழிவுகளைச் சாடிய அசலான கலைஞருக்கு அவரது தாய்வீடாம் தென்னகத் திரையுலகத்தின் சொந்தங்கள் எல்லாம் கூடி எடுத்த கலைஞர் 100 மாபெரும் கலைவிழா கண்டு - அக்காவியத் தலைவனின் கொள்கை வாரிசாக, அவர் பண்படுத்திய தமிழ் மண்ணின் முதலமைச்சராக அகமகிழ்கிறேன். அவரது மகனாக நன்றி நவில்கிறேன். 

GDLWMeXbkAApu6U.jpg

65 ஆண்டு காலம் அவர் பயணித்த துறையில் இருந்து திரண்டு வந்து அவர் நினைவைப் போற்றிய திரையுலக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி. நன்றி. கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை" என்று பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment