’ரஜினி சாருடன் மீண்டும் வேலை செய்ய ஆர்வமாக உள்ளோம்’ – தனுஷ்!

நாங்கள் அடுத்த தயாரிப்பு பற்றி இன்னும் எதுவும் அறிவிக்காததால், மக்கள் அப்படி நினைத்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.

Rajini working with Dhanush
Rajini with Dhanush

நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது கனவு மெய்யானது போன்ற உனர்வைத் தரும் என நடிகர் தனுஷ் ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார். சூப்பர் ஸ்டாரின் பின்னால் நிற்பது கூட தனக்கு போதுமானதாக இருக்கும் என்று கூட அவர் கூறியிருந்தார்.

தனுஷ் இப்படி கூறியதாலோ என்னவோ, விரைவில் ரஜினியும் தனுஷும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி பரவியது. அதோடு தனுஷ் தனது வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தை மூடவிருப்பதாகவும் கூட தகவல் வெளியானது. தற்போது இது குறித்து பேசியுள்ள தனுஷ், இந்த 2 விஷயங்களுமே வெறும் வதந்தி எனக் கூறி மறுத்திருக்கிறார்.

“எங்களது தயாரிப்பு நிறுவனம் மூடப்படும் என்ற செய்தியில் துளியளவும் உண்மையில்லை. நாங்கள் அடுத்த தயாரிப்பு பற்றி இன்னும் எதுவும் அறிவிக்காததால், மக்கள் அப்படி நினைத்திருப்பார்கள் என எண்ணுகிறேன். நிறைய தயாரிப்பாளர்கள், ஒன்றிரண்டு வருடத்துக்கு ஒருமுறை தான் ஒரு படம் தயாரிக்கிறார்கள். அதற்காக அவர்கள் களத்தில் இல்லை என எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நாங்கள் இரண்டு கதைகளைப் பற்றி இறுதி முடிவெடுக்கும் தருவாயில் உள்ளோம். விரைவில் அது குறித்து அறிவிப்போம். தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்தவரை வெற்றியும், தோல்வியும் சகஜம். இதுவரை நாங்கள் கணிசமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளோம். மீண்டும் ரஜினி சாருடன் இணைவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போதைக்கு நாங்கள் அவருடன் இணையவில்லை” என்று தெளிவுப் படுத்தியிருக்கிறார் தனுஷ்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rumors on rajinikanth dhanush project

Next Story
Bigg Boss Tamil 3: பிக்பாஸ் வனிதா, மீரா மிதுன் கைதா? – அரங்கை சுற்றி வளைத்த போலீஸார்!Bigg Boss Tamil 3 Vanitha Vijayakumar and Meera Mithun
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X