/tamil-ie/media/media_files/uploads/2019/07/Run-Serial.jpg)
Run Serial Sun TV
Sun TV's RUN Serial: தமிழ் சீரியல் உலகில் சன் டிவிக்கு என்று முக்கிய இடமுண்டு. வீட்டில் உள்ள பெண்களை டிவி முன் உட்கார வைத்த பெருமை இந்த சேனலையே சேரும். இதைப் பின்பற்றி பின் நாட்களில் வந்த மற்ற சேனல்களும் சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன.
தற்போது இருக்கும் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக முக்கியத்துவம் பெறுவது சீரியல்கள் தான். இந்நிலையில் தற்போது ஒரு புது சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி. இதில் ’தெய்வமகள்’ சீரியலில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணாவே ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு ’ரன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் ஹீரோயினாக நடித்த சரண்யா தான் இந்த ரன் சீரியலிலும் ஹீரோயினாக நடிக்கிறார். இதனை விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகும் இதன் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வேறு ஏதாவது சீரியலின் நேரத்தை மாற்றுவார்களா, அல்லது ஏதேனும் சீரியல் முடியப் போகிறதா எனத் தெரியவில்லை.
தவிர, முதன் முதலில் ‘கல்யாணப்பரிசு’ என்ற பெயரில் சினிமா பெயரை சீரியலுக்கு வைத்தது சன் டி.வி தான். பின்னர் அனைத்து சேனல்களும் சினிமா டைட்டிலில் சீரியலை ஒளிபரப்பத் தொடங்கினார்கள். இந்நிலையில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ பட தலைப்பை தங்களது புதிய சீரியலுக்கு வைத்திருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.