scorecardresearch

எஸ்.ஏ.சி வீட்டுக்கு வந்த இயக்குனர் ஷங்கர்: அங்கே விஜய் போட்டோவை பார்த்து..?

பல நாள் பட்டினியாக இருந்துருக்கேன்; விஜய் மற்றும் நாங்கள் இருவரும் நிற்கும் புகைப்படம் அருகே ஷங்கர் போட்டோ எடுத்துக்கிட்டார்; எஸ்.ஏ.சந்திரசேகர் நியூ யூடியூப் வீடியோ

எஸ்.ஏ.சி வீட்டுக்கு வந்த இயக்குனர் ஷங்கர்: அங்கே விஜய் போட்டோவை பார்த்து..?

 SA Chandrasekar talks about vijay and Shankar photo youtube video goes viral: இயக்குனர் ஷங்கர், என்னோட ஆபிஸூக்கு வந்தப்போது விஜய் மற்றும் நாங்கள் இருவர் நிற்கும் புகைப்படத்தை பார்த்து, அதனருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 70 மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்தநிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்து, தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

எஸ்.ஏ.சி தனது முதல் வீடியோவை ’பிளாட்பார்மில் எஸ்ஏசி’ என்ற தலைப்பில் தற்போது ரிலீஸ் செய்து, சென்னையில் தன்னுடைய ஆரம்ப நாட்களில் பிளார்ட்பார்மில் படுத்து உறங்கியதாகவும், இப்போதும் அடிக்கடி இங்கு வந்து படுத்து தூங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

அடுத்ததாக எஸ்.ஏ.சி விஜய்யின் அப்பாவா?, போலீஸிடம் லத்தி அடி வாங்கிய எஸ்.ஏ.சி, சோர்ந்திடாதே தடைகளைப் பார்த்து என்ற தலைப்புகளில் வீடியோக்களை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்: நான் பொலிட்டிஷியன் இல்ல… ஐ எம் எ சோல்ஜர்… இணையத்தை நெறிக்கவிடும் பீஸ்ட் டிரெய்லர்

அந்த வகையில் தற்போது, பல நாள் பட்டினி… நடக்க கூட முடியல என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தப்போது, பல நாட்கள் சாப்பிடாமல் இருந்துள்ளேன். வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் இருந்த போது, என்னுடைய அண்ணன், நான் எப்படியும் சென்னையில் தான் இருப்பேன் என வேலைபார்த்துக் கொண்டே என்னை தேடி வந்தார். அப்படி ஒரு முறை சினிமா வாய்ப்புக்காக நான் போய்க் கொண்டிருந்தபோது, என்னை தேடிக் கொண்டிருந்த என் அண்ணன் எதிரே வந்து விட்டார். அவர் என்னை பார்த்த நொடி, நான் ஓட ஆரம்பித்தேன். ஆனால் 7 நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் என்னால் ஓட முடியவில்லை. மயங்கி நின்ற என்னை என் அண்ணன் தொட்டு அழைத்தார், நான் அவரை கட்டிப்பிடித்து அரை மணி நேரம் அழுதேன். சினிமா மோகத்தில் காலில் செருப்பு கூட இல்லாமல் திரிந்த என்னை பார்த்த அண்ணன் எனக்கு செருப்பு வாங்கி தந்தார். பின்னர் சாப்பாடு வாங்கி தந்தார். அந்த நினைவுகள் தான் எனக்கு எனர்ஜி. எங்க அண்ணன் முதல்ல படிச்சு முடி என என்னை வீட்டுக்கு அனுப்ப எக்மோர் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்தார். நான் எனக்கு சினிமா எல்லாம் என அவர்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருந்தேன் என கூறியுள்ளார்.

இறுதியாக அந்த வீடியோவில், இந்த எபிசோடு நாங்க சூட் பண்ணிக்கிட்டு இருந்தப்போது ஒரு சர்ப்ரைஸ் நடந்துச்சு, இயக்குனர் ஷங்கர் என் ஆபிஸுக்குள்ள வர்றார். இருவருக்கும் பழைய நினைவுகள் வந்து, அதை நாங்க பரிமாறிக்கிட்டோம். ஷங்கர் கிளம்புகையில், ஒரு போட்டோவைப் பார்த்துட்ட அப்படியே நின்னுட்டார். அந்த போட்டோவுல நான், ஷங்கர் மற்றும் விஜய் மேல் கைவைத்து நின்னுக்கிட்டு இருப்பேன். அந்த போட்டோவ பார்த்துட்ட இயக்குனர் ஷங்கர் குழந்தை மாதிரி, அந்த போட்டோ பக்கத்தில் நின்று நாம போட்டோ எடுத்துக்கலாமானு கேட்டார். நாங்க எடுக்கிட்டோம் என்றும் எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sa chandrasekar talks about vijay and shankar photo youtube video goes viral

Best of Express