scorecardresearch

‘ஆரம்ப காலத்தில் விஜய்க்காக பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்டேன்; மறுத்தார்’: எஸ்.ஏ.சி

இயக்குனர் பாரதி ராஜாவிடம் விஜய்க்கு வாய்ப்பு கேட்டபோது மறுத்துவிட்டார் என அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

SA Chandrasekaran said that Bharti Raja refused to make a film with Vijay
எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய், இயக்குனர் இமயம் பாரதிராஜா

நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கேட்டபோது பாரதி ராஜா மறுத்துவிட்டார் என எஸ்.ஏ. சந்திரசேகர் படவிழா ஒன்றில் கூறினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “நானும் பாரதியும் ஒரே காலகட்டத்தில் நண்பர்களாக இருந்தோம்.
அவர் முதலில் டைரக்டர் ஆகிவிட்டார். அவரிடம் நான் உதவி இயக்குனராக சேர நினைத்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாம் நண்பர்களாக இருப்போம் என்றார்.

தொடர்ந்து என் மகனை அவர் இயக்கத்தில் நடிக்க வைத்த நினைத்தேன். அதற்காக ஆல்பம் ஒன்று தயார் செய்துவிட்டு அவரிடம் சென்றேன்.
அப்போதும் அவர் மறுத்துவிட்டார். என்னையும் உதவி இயக்குனராக மறுத்துவிட்டார். என் மகனையும் அவர் இயக்கவில்லை.

நீயே இயக்கலாமே என்றார். நான் அப்போது 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருந்தேன். தொடர்ந்து நானே இயக்கினேன். அதுவும் நல்லதுதான். இன்று விஜய் கமர்ஷியல் பட ஹீரோவாக உள்ளார்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sa chandrasekaran said that bharti raja refused to make a film with vijay