Advertisment
Presenting Partner
Desktop GIF

வலுவிழந்துவிட்டது விஜய் மக்கள் இயக்கம்: எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேட்டி

விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது; இது குறித்து தனது மகன் விஜயிடம் பலமுறை சொல்லிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
SA Chandrasekhar, Vijays father SA Chandrasekhar, director SA Chandrasekhar, SA Chandrasekhar speaks about Vijay Makkal iyakkam, Vijay Makkal iyakkam, Vijay

விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது; இது குறித்து தனது மகன் விஜயிடம் பலமுறை சொல்லிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கடந்த ஜூலை 3ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். எஸ்.ஏ. சந்திரசேகர் தனது பிறந்தநாளை மனைவி ஷோபா சந்திரசேகர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் தனது அனுமதி இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தக் கூடாது என தந்தை எஸ்.ஏ சந்திரசேகரை கண்டிக்கும் விதமாக நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.

இந்த சூழலில்தான், விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. மகன், மருமகள், பேரக் குழந்தைகள் சூழ நடைபெற வேண்டிய எஸ்.ஏ. சந்திரசேகரின் சதாபிஷேக விழா திருக்கடையூர் கோயிலில் அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் மட்டுமே கலந்து கொண்டார். இந்த நிகழ்சியின் வீடியோ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கேள்வி எழுப்பியது.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், தற்போது ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தனியாக யூடியூப் சேனலையும் ஆரம்பித்து தான் கடந்து வந்த பாதை பற்றியும் மகனுக்காக செய்த தியாகங்கள் பற்றியும் பேசி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் விஜய் மக்கள் இயக்கம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது; அதிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொண்டால் தான் அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும்; இது குறித்து பலமுறை மகன் விஜய்யிடம் எடுத்துக் கூறியுள்ளேன் என்று கூறினார்.

நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர்களுடன் தனுஷின் பட்டாசு படத்தில் நடித்த மெஹ்ரின் பிர்சடாவும் இந்த படத்தில் நடித்து வருகிறார். வரும் பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

S A Chandrasekaran Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment