Advertisment
Presenting Partner
Desktop GIF

லியோ படம் குறித்து அன்றே கணித்த எஸ்.ஏ.சி; பட விழா ஒன்றில் ஓபன் டாக்

‘ப்ளடி ஸ்வீட்’ என்பது வன்முறை ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட படத்தின் டேக்லைன் ஆகும், இது தமிழ் சினிமாவில் பெரிய ட்ரெண்ட் ஆனது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

author-image
WebDesk
New Update
Vijay, SA Chandrasekhar, vijay people movement will become political party when needed, விஜய், எஸ்ஏ சந்திரசேகர், விஜய் தந்தை எஸ் ஏ சந்திர சேகர், விஜய் மக்கள் இயக்கம், விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும், vijay father SA Chandrasekhar interview, no chance to join in bjp sa chandrasekhar, tamil cinema news, latest vijay news, director chandrasekhar

லியோ படம் குறித்து எஸ்ஏ சந்திர சேகரன் பேசியது வைரலாகி வருகிறது

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

vijay | lokesh-kanagaraj | s-a-chandrasekaran | நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்தப் படத்தின் 2ம் பகுதி விமர்சகர்கள் மட்டுமின்றி ரசிகர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் பட விழா ஒன்றில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “லியோ படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குநரை போனில் அழைத்து படத்தோட முதல்பாதி சூப்பர் சார். ஒரு படம் எப்படி பண்ணவேண்டுமென்று உங்களிடம் இருந்துதான் சார் கத்துக் கொள்ளணும்னு பாராட்டி பேசினேன். அதை அவர் கேட்டுக்கிட்டே இருந்தார்” என்றார்.

Advertisment

தொடர்ந்து, “படத்தின் 2வது பாதி கொஞ்சம் சரியில்லை சார்” என்றேன். இதை சொன்னதும் சார் நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கேன்னு சொன்னாரு.
மேலும், சார் இந்த மதத்தில் ஒரு தகப்பனே தனது பிள்ளையை இது போன்ற நம்பிக்கையெல்லாம் கிடையாது சார்னு சொன்னதும், அப்புறம் பேசுகிறேன் என்று போனை வைத்துவிட்டார்” என்றார்.

மேலும், “அவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் தைரியமும் பக்குவமும் இல்லை” என்றார். முன்னதாக, “படம் ரிலீஸான பிறகு எல்லாரும் வெச்சு செஞ்சாங்க. நான் சொன்னதை ஆலோசனையாக ஏற்று அதை மாற்றியிருக்கலாம்” என்றார்.
எஸ்.ஏ சந்திரசேகரனின் இந்தப் பேச்சு ட்ரெண்ட் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை அடிப்படையாகக் கொண்டது. இரத்தக் கறைப் படிந்த கடந்த காலத்தைக் கொண்ட ஒரு குடும்ப மனிதனைப் பற்றிய படம்.
 ‘ப்ளடி ஸ்வீட்’ என்பது வன்முறை ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட படத்தின் டேக்லைன் ஆகும், இது தமிழ் சினிமாவில் பெரிய ட்ரெண்ட் ஆனது.
எனினும் படம் வெளியான பின்பு விமர்சனங்களை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

S A Chandrasekaran Lokesh Kanagaraj Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment