எதிர்பார்ப்பில் சாஹோ ரிலீஸ்… இளம் பிரபாஸை இதற்கு முன் பார்த்து இருக்கீங்களா?

பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் மெகா பட்ஜெட் படமான ‘சாஹோ’. சுஜீத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. தெலுகு, தமிழ், மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் நாளை (ஆக.30) ரிலீசாகவிருக்கிறது. இந்நிலையில், இந்தியன் எக்பிரஸ் பிரத்யேகமாக வழங்கும் பிரபாஸின் சில ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு இதோ, பாகுபலி படத்திற்கு பிறகு […]

Saaho, Prabhas, Tamil Rockers, saaho review, movierulz
Saaho, Prabhas, Tamil Rockers, saaho review, movierulz

பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் மெகா பட்ஜெட் படமான ‘சாஹோ’. சுஜீத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

தெலுகு, தமிழ், மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் நாளை (ஆக.30) ரிலீசாகவிருக்கிறது.

இந்நிலையில், இந்தியன் எக்பிரஸ் பிரத்யேகமாக வழங்கும் பிரபாஸின் சில ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு இதோ,

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் சர்வதேச அளவில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, பாலிவுட் ரசிகர்கள் இவரை கொண்டாட துவங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவிலும் பிரபாஸுகென்ன தனி மார்க்கெட் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் பிரபாஸுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

மற்ற மார்க்கெட்டுகளில் நிலவரம் இப்படியிருக்க, தெலுங்கு சினிமா பற்றி கேட்கவா வேண்டும். விரைவில் பவன் கல்யாணின் மார்க்கெட்டை பிரபாஸ் தகர்ப்பார் என்பதே டோலிவுட்டின் முணுமுணுப்பாக உள்ளது.

ஆந்திராவில் பவன் கல்யாண் தான் இப்போதும் நம்பர்.1 அவருக்கு அடுத்த இடத்தில் மகேஷ் பாபு இருக்கிறார். ஆனால், பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் அங்கு தாறுமாறாக எகிறியுள்ளது.

இந்நிலையில், பெரும் பொருட் செலவில் பிரபாஸ் நடித்திருக்கும் சாஹோ திரைப்படம், தமிழ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Saaho release prabhas photo collection

Next Story
களத்தில் இறங்கிய கவுண்டமணி… ‘சிக்ஸர்’ பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்?Goundamani sent notice sixer movie producer - களத்தில் இறங்கிய கவுண்டமணி... 'சிக்ஸர்' பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X