scorecardresearch

பிரபாஸ் ரசிகர்களின் இத்தனை ஆண்டுகள் தவம்.. உலக தரத்தில் வெளியானது சாஹோ மிரட்டல் டீசர்!

Saaho Teaser : மொத்த சோஷியல் மீடியாவிலும் மதியம் முதல் சாஹோ குறித்த பேச்சு தான்

பிரபாஸ் ரசிகர்களின் இத்தனை ஆண்டுகள் தவம்.. உலக தரத்தில் வெளியானது சாஹோ மிரட்டல் டீசர்!
சாஹோ

Saaho Teaser : பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்புக்கு பிறகு நடிகர் பிரபாஸை திரையில் பார்க்க காத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் கண்களுக்கு இன்று விருந்து படைத்தது சாஹோ டீசர்.

பாகுபலி திரைப்படம் பிரபாஸுக்கு சர்வதேச அளவில் வெற்றிப் படமாய் அமைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது `சாஹோ’ படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் நடிகர் பிரபாஸ், இதற்கு நடுவில் இவருக்கு நிச்சயதார்த்தம், கல்யாணம் என ஏகப்பட்ட வதந்திகள் வட்டமிட்டாலும் சத்தமே இல்லாமல் தனது முழு கவனத்தையும் சாஹோ மீது செலுத்தினார் பிரபாஸ்.

அதன் பயன் இன்று டீசரில் மிரட்டி இருக்கிறார். டீசரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆண்டுகள் கடந்து உருவாகி வந்த சாஹோ, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின.

300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மேலும், நீல்நிதின் முகேஷ், அருண் விஜய், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சாஹோ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் பாகுபலிக்கு பிறகு இந்த படத்தில் காலம் இறங்குவதால் இவரின் அகில இந்தியா மார்க்கெட், படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சாஹோ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

வெகுநாட்களாக சாஹோ படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. டீசரை பார்க்கும்போது அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது எனவே கூறலாம். வெளிநாடுகளில் முழுவதுமாக எடுக்கப்பட்டிருக்கும் சாஹோ கிட்டத்தட்ட வெளிநாட்டு படம் போலவே தெரிகிறது. டீசரே ரசிகர்களை மிரட்டி எடுத்துள்ளது.

ரசிகர்களை மட்டுமில்லை சினிமா பிரபலங்கள் சாஹோ டீசரை பார்த்து விட்டு தங்களது வாழ்த்துக்களை படக்குழுவிற்கு தெரிவித்து வருகின்றனர். மொத்த சோஷியல் மீடியாவிலும் மதியம் முதல் சாஹோ குறித்த பேச்சு தான் சென்றுக் கொண்டிருக்கிறது.

சாஹோ படத்தின் தமிழ் டீசர் இதோ..

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Saaho teaser saaho official teaser released actor prabhas saaho teaser