Saamy Square Audience Review : சியான் விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சாமி 2 படம் வெளியானது.
நடிகர் விக்ரம் நடித்த சாமி படத்தின் முதல் பாகம் 2003ம் ஆண்டும் வெளியானது. அதனை தொடர்ந்து, சுமார் 15 வருடங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் விக்ரம் மீண்டும் களமிறங்கியிருக்கும் படம் சாமி 2. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.
Read More: Saamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை!
முதலில் இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அந்த ஒப்பந்தத்தை அவர் ரத்து செய்ததால், த்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாமி 2 படம் இன்று உலகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இப்படத்தின் வெளியீட்டை விக்ரம் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். அனைத்து திரையரங்குகளிலும், பெரிய பேனர்கள், கட் அவுட்கள் வைத்தும் வெடி வெடித்தும் கொண்டாடினார்கள்.
Arampichachu #SaamySquare now theni gobi Krishna pic.twitter.com/cbOaDauDJG
— samdheera_cvf (@samdheera) 21 September 2018
இப்படத்தை பார்த்த பொதுமக்கள் பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
விக்ரம் விக்ரம் தான்யா ????
மனுஷன் பின்றாப்ல ! அடேய் சூரி ????— சேட்டை™ ❤ (@Settai_Offl) 21 September 2018
#SaamySquare review ல சூரி காமெடி தான் பெரிய மைனஸ் போல..
ஹரி சார் சூரி காமெடி சீன்ஸ் ah அப்டியே கொத்தொட வெட்டி தூக்கி எரிஞ்க சார்..படம் சூப்பர் ஹிட் !!#SaamySquare #SaamySquareFromToday— தல ரசிகன்???? (@Thala_Ajith15) 21 September 2018
இடைவேளை- கீர்த்தி சுரேஷ் & சூரி சீன்ஸ் கழிச்சுட்டா வழக்கமான செம ஸ்பீடானா ஹரி படம் ????????
அது ரெண்டும் வர சீன்ஸ்லாம் கொடூரம் ????????
விக்ரம் ????
இண்டர்வெல் சீன்ஸ் ????#SaamySquare
— பிரகாஷ் (@PrakashMahadev) 21 September 2018
சாமி 2 படம், பக்கா மாஸாக இருப்பதாக சிலரும், மேலும் சிலர் இது ஹரி படமே இல்லை எதிர்பார்த்த அளவுக்கு இல்லவே இல்லை என்றும் கருத்துகள் பதிவிடுகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Saamy square public review keerthy vikram starrer drama film
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்