SAC talks about Vijay marriage video goes viral: நடிகர் விஜய் திருமணம் நிகழ்வு குறித்து அவரது எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
90 களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 70 மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்தநிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்து, பிளார்ட்பார்மில் எஸ்.ஏ.சி என்ற வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து வரிசையாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் எஸ்.ஏ.சி.
இந்நிலையில் தனது மகன் விஜய் திருமணம் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: அஜித்- ஷாலினி ரொமான்ஸ் போட்டோ பகிர்ந்த ஷாமிலி: கொழுந்தியா குசும்பு இது தானோ?!
அந்த வீடியோவில், விஜய் திருமணத்திற்கு நாங்கள் 15 ஆயிரம் ரசிகர்களை மட்டும் கூப்பிட்டு பிரியாணி போட்டதாக ஒருவர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் விஜய் திருமணத்தின்போது 55 ஆயிரம் ரசிகர்களை வரவைத்து திட்டமிட்டு விழாவை நடத்தினோம். நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக விழாவை நடத்தினோம். 4 அடுக்கிலும் 4 இசையமைப்பாளர்களை வைத்து இசைக்கச்சேரிகள் நடத்தினோம். இந்த நிகழ்வுக்கு முதல் நாள் விஜய்யின் திருமணம் முறைப்படி நடைபெற்றது. அடுத்த நாள் ரசிகர்களுக்காக, இந்த திருமண விழாவை நடத்தினோம். விஜய் – சங்கீதாவை ரசிகர்கள் மத்தியில் நடக்க வைத்து மாலை மாற்றி மிகப் பிரமாண்டமாக இந்த விழா நடந்தது. இந்த நிகழ்வு முடிந்து அரங்கத்தின் நான்கு நுழைவு வாயில்களிலும் ரசிகர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, இந்த அளவிற்கு அற்புதமாக வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் – சங்கீதா திருமணம் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி நடந்தது. நடிகர் விஜய் தனது தீவிர ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil