நடிகை ஜெனிலியா, தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். காதல், நகைச்சுவை, மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். ரெட்நூல் யூடியூப் பக்கத்தில் தனது திரைப் பயணம், குடும்ப வாழ்க்கை, மற்றும் திரையுலகுக்கு மீண்டும் வருவது பற்றிப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதை பற்றி பார்ப்போம்.
Advertisment
தென்னிந்திய திரையுலகம் தனது "வீடு" என்று ஜெனிலியா உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். "நான் இங்கிருந்துதான் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். மற்ற எந்தத் துறையிலும் இவ்வளவு அன்பு எனக்குக் கிடைத்ததில்லை" என்று கூறினார். "ஹாசினி" கேரக்டர் மற்றும் "பாய்ஸ்" போன்ற படங்கள் ரசிகர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார். தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெனிலியா, "பல வருடங்களுக்குப் பிறகும், நீங்கள் இப்போதும் அதே அன்பைக் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
ஜெனிலியா தனது அன்பான குடும்பம், திரைத்துறை நண்பர்கள், மற்றும் திரைப்படத்தில் மீண்டும் தோன்றுவது குறித்தும் பேசினார். "சீதாரே ஜமீன்" திரைப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து ரசிகர்கள் அளித்த நல்ல வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், விரைவில் பெரிய திட்டங்களுடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் அவர் கூட படம் நடித்தது குறித்தும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலில் நுழைந்தது பற்றிய கேள்விக்கு, ஜெனிலியா தனது நெஞ்சார்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
"விஜய் சினிமாவுக்கு விடைபெற்று அரசியலில் இணைந்துள்ளார் என்று கேள்விப்பட்டேன். ஒரு சினிமா ரசிகையாக, அவருடைய படங்களை நாங்கள் அனைவரும் நேசித்தோம். அவருடன் இரண்டு படங்களில் நடித்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். அவர் மீண்டும் ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும். எதுவாக இருந்தாலும், அவர் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் எங்கள் வாழ்த்துக்கள் அவருக்கு உண்டு" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.