நைட்டோட நைட்டா மாத்துடா டியூன... விஜய்க்கு பிடித்த பாட்டை தவிர்த்த சச்சின் படக்குழு; கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!
விஜய் நடிப்பில் வெளியான “சச்சின்” படத்தில் ”கட்டிக்கோடா” பாடல் சேர்க்கப்பட்டதன் பின்னணி குறித்து அப்படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் விகடன் நடத்திய நேர்காணலில், விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான “சச்சின்” படத்தில் ”கட்டிக்கோடா” பாடல் சேர்க்கப்பட்டதன் பின்னணி குறித்து அப்படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் விகடன் நடத்திய நேர்காணலில், விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
நைட்டோட நைட்டா மாத்துடா டியூன... விஜய்க்கு பிடித்த பாட்டை தவிர்த்த சச்சின் படக்குழு; கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!
விஜய், ஜெனிலியா நடிப்பில், ஜான் மகேந்திரன் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெளியான 'சச்சின்' திரைப்படம் 2005-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்ற "கட்டிக்கோடா" பாடல், இன்றும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்த குத்துப் பாடலாக உள்ளது. இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் மிகவும் சுவாரஸ்யமானது. இயக்குநர் ஜான் மகேந்திரன், விகடன் நடத்திய நேர்காணலில், ஒரு இரவில் கட்டிக்கோடா பாடல் திடீரென படத்தில் சேர்க்கப்பட்டதன் பின்னணியை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
Advertisment
இயக்குநர் ஜான் மகேந்திரன் குறிப்பிட்டபடி முதலில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த தெலுங்குப் பாடலை 'சச்சின்' படத்தில் சேர்க்க நடிகர் விஜய் மிகவும் விரும்பியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் புதிய பாடல் ஒன்றை உருவாக்க முன்வந்தாலும், விஜய் அந்தப் பாடலைச் சேர்க்கும் தனது விருப்பத்தில் உறுதியாக இருந்திருக்கிறார். இதையடுத்து, படக்குழுவினர் தெலுங்கு தயாரிப்பாளர்களைத் தொடர்புகொண்டு, அந்தப் பாடலைத் தமிழில் ரீமேக் செய்ய அனுமதி பெற்றனர். ஆனால், படத்தின் வெளியீட்டிற்கு முதல் நாள் இரவு, பாடலின் உரிமையாளர்கள் அதிக விலை கேட்டு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது, ஏனெனில் தேவி ஸ்ரீ பிரசாத் மூலம் விஜய் படத்திற்குப் பாடல் பயன்படுத்தப்படுவது அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஏற்கனவே இருந்த பாடலின் வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு, பின்னணி இசையையும், டியூனையும் ஒரே இரவில் மாற்றியமைத்தார். ஏனெனில் விஜய் மற்றும் பிபாஷா பாசு ஏற்கனவே வேறு ஒரு தாளத்திற்கு நடனமாடியிருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இரவு முழுவதும் உழைத்து, புதிய பாடலை உருவாக்கி, அடுத்த நாள் காலையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, "கட்டிக்கோடா" பாடல் படத்தில் சேர்க்கப்பட்டது. இந்தச் சட்டச் சிக்கல் காரணமாகவே, பாடல் ஒரு வாரம் கழித்து திரையரங்குகளில் சேர்க்கப்பட்டதாக இயக்குநர் ஜான் மகேந்திரன் அந்த நேர்க்காணலில் கூறினார். இந்தப் பாடலை இளங்கோ எழுதியுள்ளார். அவரது வரிகள், இளம் காதலர்களின் துள்ளலான உணர்வுகளையும், ஜாலியான மனநிலையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.