சாக்ரெட் கேம் 2: குரு ஜி கதாபாத்திரத்தைப் புரிந்துக் கொள்வது கடினம் - பங்கஜ் திரிபாதி!

பார்வையாளர்களின் ஆர்வத்தை மேலும் தூண்ட, திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள். 

பார்வையாளர்களின் ஆர்வத்தை மேலும் தூண்ட, திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sacred game 2, Pankaj Tripathi

பங்கஜ் திரிபாதி

சேக்ரட் கேம் இரண்டாவது சீசன் நெட் ஃபிளிக்ஸில் நேற்று முதல் (ஆகஸ்ட் 15) ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. நவாசுதீன் சித்திக், பங்கஜ் திரிபாதி, கல்கி கோச்லின், சுர்வீன் சாவ்லா, சாயிஃப் அலி கான் மற்றும் பலர் நடித்த இந்த திரில்லர் வெப் சிரீஸ் வெளியான ஒரே நாளில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பார்வையாளர்களின் ஆர்வத்தை மேலும் தூண்ட, திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

Advertisment

அந்த வீடியோவில், இயக்குநர்கள் அனுராக் கஷ்யாப் மற்றும் நீரஜ் கய்வான், விக்ரமாதித்யா மோட்வானே, நடிகர்கள், கல்கி கோச்லின், பங்கஜ் திரிபாதி மற்றும் ரன்வீர் ஷோரே ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களைப் பற்றிக் கூறுகிறார்கள்.

“வருண் குரோவர் மற்றும் விக்ரமாதித்யா மோட்வானே இருவரும் தான் இதன் ஷோ ரன்னர்கள்” என கஷ்யாப் தெரிவிக்க, ”முக்கிய கதாபாத்திரங்களுடன் பல சிறிய கதாபாத்திரங்களும் இருக்கப் போகின்றன. சீசன் இரண்டு மிகவும் பெரியதாக இருக்கும்” என்று தகவல் தருகிறார் கெய்வான்.

Advertisment
Advertisements

அதன் அடிப்படையில் சாக்ரெட் கேம் சீசன் இரண்டின் மிக முக்கியமான கதாபாத்திரம், குருஜி.  பங்கஜ் திரிபாதியின் இந்த கதாபாத்திரம் சாக்ரெட் கேம் சீசன் 2 நெட்ஃபிளிக்ஸில் தனது ஒளிபரப்பை தொடங்குவதற்கு முன்பே, பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டியது. இந்நிலையில் "குருஜியைப் புரிந்துகொள்வது கடினமான பணி" என்று திரைக்குப் பின்னால் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஒப்புக் கொள்கிறார் திரிபாதி.

கோச்லின் மற்றும் திரிபாதியை தவிர, அம்ருதா சுபாஷ் மற்றும் ரன்வீர் ஷோரே ஆகியோரும் சாக்ரெட் கேம் வெப் சிரீஸின் இரண்டாவது சீசனில் இணைந்துள்ளனர்.

Bollywood Anurag Kashyap

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: