’பிரச்னை முடிஞ்சது’: ’அழகு’ சீரியலில் மீண்டும் இணைந்த சஹானா ஷெட்டி!
Azhagu Serial on Sun TV: சீரியல் யூனிட்டில் இருந்து அழைத்து, ‘உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி ட்ராக் இருக்கும், அதனால ஷூட்டிங் கிளம்பி வாங்க’னு சொன்னாங்க.
Azhagu Serial on Sun TV: சீரியல் யூனிட்டில் இருந்து அழைத்து, ‘உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி ட்ராக் இருக்கும், அதனால ஷூட்டிங் கிளம்பி வாங்க’னு சொன்னாங்க.
Sahana Sheddy: கடந்த சில வாரங்களுக்கு முன், தான் நடித்துக் கொண்டிருந்த ’அழகு’ சீரியலில் இருந்து விலகினார் சஹானா ஷெட்டி. இது குறித்து முன்பு நம் தளத்தில் செய்தியும் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அவர் மீண்டும் ரீ எண்ட்ரியாகியிருக்கிறார்.
Advertisment
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று, வெற்றித் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது ‘அழகு’ சீரியல். இதில் ரேவதி கதாநாயகியாகவும், இவருடன் தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். அழகு தொடரில் ரேவதிக்கு மகளாக நடித்து வந்தார் சஹானா. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அவர் திடீரென, அழகு சீரியலில் இருந்து விலகினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைப் பற்றி, “முக்கியமான நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் முதலில் இயக்குநர்கள் என்னிடம் நடிகை ரேவதிக்கு லீடு கொடுக்கும் கதையில் நடிகை உள்ளீர்கள் என்று சொல்லிதான் கூப்பிட்டார்கள். நாலு அண்ணன், தம்பிகளுக்கு நான் ஒரே ஒரு தங்கச்சி. சொல்லப்போனால் ‘ சின்ன தம்பி’ குஷ்பு மாதிரி நீங்க இந்த கதையில் நடிக்க போகிறீர்கள் என்று என்னிடம் கூறினார்கள். ஆரம்பத்தில் நன்றாக தான் சென்றது. ஆனால், எபிசோடுகள் செல்ல செல்ல என் கேரக்டர் எனக்கே ரொம்ப போரடிக்கிற மாதிரி இருந்தது.எனக்கு தெரிந்தவர்களும், ஏன் டல்லா நடிச்சுட்டு இருக்கீங்க, எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத கதாபாத்திரமா போயிட்டு இருக்கு என்று அடிக்கடி கூறுவார்கள். அதனால் நீண்ட யோசனைக்குப் பிறகு சீரியலில் இருந்து விலகிவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் மீண்டும் அழகு சீரியலுக்கு ரீ எண்ட்ரியாகியிருக்கிறார் சஹானா. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் அவர், “தொலைக்காட்சியில் இருந்து என்னிடம் பேசினார்கள். ‘என்ன நடந்தது என்றுக் கேட்டார்கள். அவர்களிடம் என்னுடைய வருத்தத்தைச் சொன்னேன். அதை கேட்டுவிட்டு தயாரிப்புத் தரப்பில் பேசுவதாக குறிப்பிட்டார்கள். பின்னர் சீரியல் யூனிட்டில் இருந்து அழைத்து, ‘உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி ட்ராக் இருக்கும், அதனால ஷூட்டிங் கிளம்பி வாங்க’னு சொன்னாங்க. ரேவதி மேடம் மாதிரியான சீனியர்கள் நடிக்கிற சீரியல்ல ஒரு சாதாரண கேரக்டர் தான் நான். ஆனால், என்னுடைய பிரச்னையையும் காது கொடுத்துக் கேட்டதே பெரிய விஷயமில்லையா, அதனாலதான் மறுபடியும் சீரியலுக்குள் வர இருக்கிறேன்” என்றுக் கூறியுள்ளார்.