தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், சூர்யா நடிக்கும் 45-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி சூர்யாவின் 45-வது திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார்.
சூர்யாவின் 45 படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் லப்பர் பந்து புகழ் சுவாசிகாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், சூர்யா 45 படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்தில் அவர் திடீரென விலகியதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, சமீபத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே விஷ்ணு கமிட்டாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் இடம்பெறாததால் அவர் இப்படத்தில் இருந்து விலகியது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
இந்த நிலையில், சூர்யா 45 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. பிரபல பாடகர்களான திப்பு - ஹரிணி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் தனது ஆல்பம் பாடல்கள் மூலம் பெரும் வரவேற்பை பெற்றது. அவரின் ஆச கூட, கட்சி சேர பாடல்கள் இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“