Advertisment

கொட்டும் மழையில் சுற்றிச்சுற்றி சிலம்பமாடும் சாய் தன்ஷிகா வீடியோ; மிரண்டு போன ரசிகர்கள்

நடிகை சாய் தன்ஷிகா, கொட்டும் மழையில் சுற்றிச்சுற்றி சிலம்பமாடும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் அவரைப் பாராட்டி வருகிறனர்.

author-image
WebDesk
Nov 08, 2020 17:53 IST
sai dhanshika, sai dhanshika silambam practice, sai dhanshika silambam practice while raining, சாய் தன்ஷிகா, சாய் தன்ஷிகா சிலம்பம் சுற்றும் வீடியோ, வைரல் வீடியோ, video, viral video, tamil viral news, tamil entertainment news, tamil cinema trending news

தமிழ் சினிமா துறையில் துடிப்பான நடிகைகளில் ஒருவரான நடிகை சாய் தன்ஷிகா, கொட்டும் மழையில் சுற்றிச்சுற்றி சிலம்பமாடும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் அவரைப் பாராட்டி வருகிறனர்.

Advertisment

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ரஜினிக்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் சாய் தன்ஷிகா. அவர் தொடர்ந்து, சினிமாக்களில் நடித்து வருகிறார்.

சாய் தன்ஷிகா அவ்வப்போது சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். அண்மையில், சாய் தன்ஷிகா, தமிழகத்தின் தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், சாய் தன்ஷிகா கொட்டும் மழையில், சுற்றிச்சுற்றி சிலம்பம் சுழற்றி விளையாடும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். சாய் தன்ஷிகா ஒரு தேர்ந்த சிலம்ப விளையாட்டு வீராங்கணையைப் போல, சிலம்பம் சுற்றியதைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் அவரை பாராட்டி வருகின்றனர்.

தான் சிலம்பம் சுற்றும் வீடியோ குறித்து, சாய் தன்ஷிகா குறிப்பிடுகையில், “மழை பெய்யும்போது சிலம்பம் சுற்றியது ஒரு உண்மையான அனுபவம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை தன்ஷிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அவற்றில் லாடம் என்ற படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உடன் முக்கிய பாத்திரத்தில் சாய் தன்ஷிகா நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
#Sai Dhanshika #Video #Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment