/tamil-ie/media/media_files/uploads/2018/12/maari-2-sai-pallavi-.........jpg)
Maari 2 Movie in TamilRockers: மாரி 2 குழுவினரை அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்
Sai Pallavi at Maari 2: மாரி 2 - தனுஷ் நடிப்பில் குறுகிய காலத்தில் பார்ட் 2-வாக வெளிவர இருக்கும் படம்! மாரி முதல் பாகம், எதிர்பார்ப்பில்லாமல் சாதாரணநாளில் வெளிவந்து மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்று வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதுவரை இன்றைய தலைமுறையில் சாதாரண நாளில் இவ்வளவு பெரிய ஓப்பனிங்கை வேறு பல முன்னணி நடிகர்கள் பெற்றதில்லை. அதற்கு காரணம் தனுஷின் புதுப்பேட்டைக்குப் பிறகு அவர் நடிக்கும் தாதா கதாபாத்திரம்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தப்படத்தில் தனுஷின் கதாபாத்திரத்திற்க்கு இணையாக காஜல் அகர்வால் ஒரு சராசரி பெண்ணாகவே இயல்பாக நடித்திருப்பார்.
காஜல் அகர்வால் மாரி முதல்பாகத்திற்கு ஒரு ப்ளஸ் என்பதை தனுஷே ஒப்புக்கொள்வார். தற்பொழுது மாரி இரண்டாம் பாகத்தில் மலையாளத்தின் சூப்பர் ஹிட் பிரேமம் மூலம் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் கலக்கிய சாய் பல்லவி நடிக்கிறார். தமிழில் சாய் பல்லவி சில படங்கள் நடித்திருந்தாலும் கதாபாத்திர அளவில் இன்னும் சொல்லக்கூடிய அளவில் எந்தபடமும் அமையவில்லை.
ஏற்கெனவே காஜல் அகர்வால் பொருந்தியிருந்த பாத்திரத்தில் சாய் பல்லவி பொருந்துவாரா? இல்லை, தன்னுடைய தனித்துவத்தை நிரூபிப்பாரா? என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும். காஜலா? சாய் பல்லவியா ? பார்ப்போம் படம் வெளியான பின்பு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.