2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி!

நான் அழகு சாதனப் பொருட்களுக்கு ஆதரவளிப்பதில்லை.

sai pallavi, சாய் பல்லவி
sai pallavi, சாய் பல்லவி

இயற்கையான அழகாலும் இயல்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் சாய் பல்லவி.

இவர் சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நடித்து மாரி 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’ரவுடி பேபி’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.

இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாள திரைப்படமான ’அதிரன்’ கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இதில் ஃபகத் ஃபாசில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்து, 2 கோடி சம்பளத்துடன் ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.

பிரபலமான ஃபேர்னெஸ் கிரீம் விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி அணுகப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் ஒரு போதும் அந்த காஸ்மெடிக்கை பயன்படுத்தாத சாய் பல்லவி, விளம்பரத்திற்காக அதில் நடிக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

தன்னுடைய குறிக்கோள் மற்றும் விருப்பத்திற்கு எதிராக தான் ஒருபோதும் செயல்படுவதில்லை என முன்பே ஒரு நேர்க்காணலில் அவர் கூறியிருந்தார். “நான் அழகு சாதனப் பொருட்களுக்கு ஆதரவளிப்பதில்லை. உங்களது தோற்றத்தின் மீது முதலில் நீங்கள் தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார் சாய் பல்லவி.

Web Title: Sai pallavi rejects 2 crore ad

Next Story
Election 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்Election 2019 - Tamil Celebrities
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express