தமிழில் கடந்த 2005-ம் ஆண்டு மீரா ஜாஸ்மின், பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் என்ற படத்தில் கல்லூரி மாணவியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து, ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தில் நடித்த அவர், 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாக பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படம் மலையளத்தில் வெளியாகியிருந்தாலும் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதில் மலர் டீச்சராக அவர் நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் டாக்டர், டான்ஸ்ர், நடிகை எனப் பன்முகத் தன்மை கொண்டவர். சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். இயல்பாக நடிப்பார், அதிகம் மேக்கப் செய்து கொள்ளாமல் இயல்பான தோற்றத்தில் இருப்பார். அதனாலயே இவருக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர்.
சாய் பல்லவி பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யூடியூப் இன்டர்வியூ, விருது விழாக்களில் சேலை அணிந்த படியே வருவார். மற்ற நடிகைகள் மார்டன் உடையில் வந்தாலும் இவர் பெரும்பாலும் விதவிதமான சேலையில் வந்து அழகாக தோன்றுவார்.
/indian-express-tamil/media/media_files/z6btVkFT85I0IO7K5WpE.jpg)
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சாய் பல்லவி பேட்டி கொடுத்துள்ளார். அதில், பேட்டி எடுப்பவர், இன்டர்வியூ, விருது விழாக்களில் நீங்கள் எப்போதும் சாரீ உடையில் தான் வருகிறீர்கள். உங்களுக்கு டிரெடிஷன் லுக் தான் பிடிக்குமா? என்று கேட்கிறார்.
இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, "இது என்னுடைய கம்போர்ட்டபுள் உடை. நிகழ்ச்சிகள் எப்போதும் ப்ரஸராக இருக்க கூடியது. அப்போது அங்கு என்ன பேச வேண்டும் என்று தான் யோசிக்க முடியும். உடை மீது கவனம் செலுத்த முடியாது. அங்கு என்ன பேச வேண்டும் என்பதை தான் யோசிக்க வேண்டும். அதனால் நான் எந்த உடையில் கம்போர்ட்டபுள் ஆன உணர்கிறேனோ அதை அணிந்து வருகிறேன். ஹய் ப்ரஸராக இருக்கும் இடங்களில் சாரீ அணிவதை விரும்புகிறேன்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“