கபாலி உருவாக்கிய தாக்கம்: ‘யோகி’ தன்ஷிகா ஆசை இதுதான்..!

SaiDhanshika: கபாலி படத்தில் யோகி கதாபாத்திரமும், அதில் அவர் காட்டிய ஆக்க்ஷன் ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்ததாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தன.

By: December 25, 2018, 5:58:50 PM

SaiDhanshika In Yohida: விஜயசாந்தியின் தாக்கத்தை சினிமா உலகம் மறக்காது. போலீஸ் பெண் அதிகாரி என்றாலே, விஜயசாந்தி ஞாபகம் வருகிற மாதிரி போலீஸ் மற்றும் ஆக்‌ஷன் வேடங்களில் பட்டையைக் கிளப்பினார் அவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆக்க்ஷன் ஹீரோக்களுக்கு இணையாக பயணம் செய்தார். வைஜெயந்தி ஐ.பி.எஸ். படம், அவரது கேரியரிலும், சினிமா உலகிலும் ஒரு மைல் கல்!

விஜயசாந்தியின் இடத்தை நிரப்ப ஓரிரு படங்களில் சில நடிகைகள் முயற்சித்தாலும், யாருக்கு அது ‘செட்’ ஆகவில்லை. காரணம், பாடி லாங்வேஜ் தொடர்ந்து மெய்ன்டெய்ன் செய்வது சிரமம். சிலருக்கு உடலமைப்பு இருந்தாலும் ஆக்க்ஷன் காட்சிகளும் கதாநாயகிக்கான முக அமைப்பும் இருக்காது. அப்படியே ஆக்க்ஷன் நாயகியாக இருந்தாலும், போலீஸ் கேரக்டர்கள் பொருந்தாது.

இந்த நிலையில்தான் தன்ஷிகா, அந்த இடத்திற்கு கல் எறிந்து கொண்டிருக்கிறார். கபாலியில் யோகி கதாபாத்திரத்தில் பின்னிய அதே தன்ஷிகாதான். ஆரம்பத்தில் தன்ஷிகாவும் சராசரி கதாநாயகியாக வந்து சென்றுவிடும் நிலையில்தான் இருந்தார். கபாலி படத்தில் யோகி கதாபாத்திரமும், அதில் அவர் காட்டிய ஆக்க்ஷன் பர்பார்மன்ஸும் ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்ததாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தன.

தற்போது அவரின் பேவரிட் பெயரான யோகி என்கிற பெயரை உள்ளடக்கி, யோகிடா என்ற ஆக்க்ஷன் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து இவருக்கு ஆக்‌ஷனை வெளிப்படுத்தும் தோற்றமும் வாய்ப்பும் கூடி வருகின்றன. தன்ஷிகாவுமே, ‘விஜயசாந்திக்கு அமைந்தது போல் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையிலான வைஜெயந்தி ஐபிஎஸ் போன்ற கனமான கதையை தேடுவதாக’ நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இளம் இயக்குநர்கள் கவனம் கொள்க!

திராவிட ஜீவா

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Saidhanshika yohida action role

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X