இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள முதல் படமான எல்.ஜி.எம் படம் வரும் ஜூலை 28-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக பல்வேறு சாதனைகளை படைத்த மகேந்திர சிங் தோனி தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், திரைப்படத்துறையில் எண்ட்ரி ஆகியுள்ளார். தோனி எண்டர்டெயின்மென்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் படமாக எல்.ஜி.எம் திரைப்படம் உருவாகியுள்ளது.
ஹரிஷ் கல்யான், இவானா, நதியா, யோகி பாபு, வெங்கட் பிரபு மற்றும் வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் சென்னையில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தோனியின் மனைவி, சாக்ஷி, நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் தோனி ஹீரோவாக மாற தயாராக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தோனி ஒரு படத்தில் முன்னணி நாயகனாக நடிப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள சாக்ஷி தோனி, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் அது நடக்கும். அவர் கேமரா வெட்கப்படுபவர் அல்ல. 2006 முதல் விளம்பரங்களில் நடித்து வரும் அவர், கேமராவை எதிர்கொள்ள பயப்படுவதில்லை. எனவே, ஏதாவது நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் நிச்சயமாக அதைச் செய்யலாம் என்று கூறியுள்ளர்.
மேலும் தோனி என்ன வகையான படங்களில் நடிக்க விரும்புகிறீங்கள் என்று கேட்டபோது, பதிலளித்த இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி, "அவர் ஒரு நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோ, நான் அவரை ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் பார்க்க விரும்புகிறேன்" என்று கூறினார். தோனிக்கும் தமிழகத்திற்கும் உள்ள உணர்வுபூர்வமான தொடர்புதான் அவர் தமிழில் படம் எடுக்கக் காரணம் என்று சாக்ஷி கூறினார்.
முன்னதாக, எல்ஜிஎம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், பேசிய சாக்ஷி தோனி, தமிழ்நாடு தன்னை தனது சொந்தக்காரராக ஏற்றுக்கொண்டதாகவும், இது ஒரு சிறிய பட்ஜெட் முயற்சியுடன் தொடங்குவதற்கான ஒரு நடவடிக்கை என்றும் கூறிய அவர், “நாங்கள் முதலில் சிறிய விஷயத்துடன் தொடங்குவோம் என்பதில் தெளிவாக இருந்தோம். ஒரு குழந்தை உடனே நடக்க ஆரம்பிக்காது போல. அது கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நமக்கும் பொருந்தும். தமிழகத்துடன் உணர்வுபூர்வமான தொடர்பு இருப்பதால் முதலில் தமிழில் தொடங்க விரும்பினோம். மொழி எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. நீண்ட காலம் நீடிக்கும் இந்த நிறுவனத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். நாம் திரும்பிப் பார்க்கும்போது, இது தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து இப்படத்தின் யோசனை உலகளாவிய பிரச்சினை படத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் சாக்ஷி ஈடுபட்டிருந்தாலும், அனைவருக்கும் முழுமையான சுதந்திரத்தை அளித்ததாக இயக்குனர் ரமேஷ் கூறினார். “தமிழ் பேசக்கூடிய ஒரு கதாநாயகி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தோனி இதுவரை மூன்று முறை படத்தைப் பார்த்திருக்கிறார் என கூறியுள்ளர்ர்.
படம் குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறுகையில், ரஜினி சார் அல்லது கமல் சார் அல்லது விஜய் சார் போன்ற நட்சத்திரங்களுக்கு நேரத்தைப் பொருட்படுத்தாமல் தியேட்டருக்குச் செல்லும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும். எனவே, சிறிய பட்ஜெட் படங்களுக்கு இது கடினம். அதனால், நான் கொஞ்சம் கவலைப்பட்டேன். ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் நட்சத்திரம் வித்தியாசம் இல்லாமல் மக்கள் நல்ல படங்களைக் காட்டியுள்ளனர். லவ் டுடே அதற்கு பெரிய உதாரணம். எனவே, நான் அதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எல்ஜிஎம் என்பது அனைவருக்குமான ஒரு ஃபீல் குட் குடும்ப படம் என்று தெரிவித்திருந்தார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“