52 நாட்கள் படப்பிடிப்பு நடந்துச்சு; அதன்பிறகு யாருமே கண்டுக்கல: தேசிய விருது பெற்ற நடிகர் ஆட்டோ ஓட்டும் அவலம்!

'சலாம் பாம்பே!' திரைப்படத்தின் நாயகன் ஷஃபிக் சையத், தெருவில் கண்டெடுக்கப்பட்டு, புகழின் உச்சிக்கு சென்ற பின், சினிமா வாய்ப்புகள் அற்று, ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ளார்.

'சலாம் பாம்பே!' திரைப்படத்தின் நாயகன் ஷஃபிக் சையத், தெருவில் கண்டெடுக்கப்பட்டு, புகழின் உச்சிக்கு சென்ற பின், சினிமா வாய்ப்புகள் அற்று, ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Child Artist

ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கண்களில் சினிமா கனவுகளை சுமந்து மும்பை நகருக்கு படையெடுக்கிறார்கள். இவர்கள் ஒருநாள், ஒரு திரைப்பட இயக்குநரின் கண்ணில் பட்டு, தங்கள் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிடாதா என்று காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர் தான் ஷஃபிக் சையத். தெருவில் இருந்த ஒரு பையனுக்கு, உலகப் புகழ்பெற்ற ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

அவரது முதல் படமான 'சலாம் பாம்பே' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு, அவர் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை. வாய்ப்புகள் வராததால், அவர் மும்பையை விட்டு வெளியேறி, தனது சொந்த ஊரான பெங்களூருவுக்குத் திரும்பினார். அங்கே, ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது புகழ்பெற்ற கடந்த காலம், அவரது அன்றாட வாழ்க்கையிலிருந்து மறைந்து போனது.

ஒரு காலத்தில் இந்திய குடியரசுத் தலைவரால் கௌரவிக்கப்பட்டு, மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருதை வென்றவர், தினமும் 150 ரூபாய் சம்பாதித்து, தன் குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கு உணவு அளிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இந்த சோகமான வாழ்க்கையால் மனமுடைந்து, இரண்டு முறை தற்கொலைக்கும் முயன்றார் ஷஃபிக்.

Advertisment
Advertisements

ch589689-08

1980களில், ஷஃபிக் வீட்டை விட்டு ஓடிவந்து, டிக்கெட் இல்லாமல் மும்பைக்கு பயணம் செய்துள்ளார். “இந்தி படங்களில் பார்ப்பது நிஜமாக இருக்கிறதா என்று பார்க்கத்தான்” அவர் மும்பை வந்ததாக கூறினார். சர்ச்கேட் ரயில் நிலையம் அருகே தெருக்களில் வசித்து வந்தபோது, ஒரு பெண் ஷஃபிக் மற்றும் அவரது தெரு நண்பர்களிடம், ஒரு நடிப்புப் பட்டறைக்கு வந்தால் 20 ரூபாய் தருவதாக கூறினார். மற்ற குழந்தைகள் ஏமாற்று வேலை என்று ஓடிவிட, ஷஃபிக் பசியின் கொடுமையால் அந்த பெண்ணின் பேச்சுக்கு சம்மதித்து அவருடன் செல்கிறார்,  அங்கே, நூற்றுக்கணக்கான குழந்தைகளிடையே, மீரா நாயரின் 'சலாம் பாம்பே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று இந்திய திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் உள்ளது. 2010-ம் ஆண்டு  ஒரு பேட்டியில் ஷஃபிக், “படப்பிடிப்பின் போது, நான் நடிக்கவே தேவையில்லை என்று உணர்ந்தேன். நான் ஏற்கனவே வாழ்ந்த மொழி, கதைகள் மற்றும் சூழ்நிலைகள் அப்படியே இருந்தது. மக்கள் 'சலாம் பாம்பே' ஒரு 'கலைப்படம்' என்று சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அது எனது சொந்தக் கதை போன்றது. அது

தெருவில் வாழும் இந்தியாவின் வாழ்க்கை. மரணத்திலிருந்து வேறுபாடு அல்லாத வாழ்க்கை. நான் அதை வாழ்ந்தேன். உடன் நடித்த ரகுவீர் யாதவ், நானா படேகர், அனிதா கன்வர் போன்றவர்கள் எனக்கு உதவினார்கள். நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தின் உண்மையான 'எதிர்வினை' என்பதை நான் கற்றுக்கொண்டேன். மற்றவரின் அசைவுகள், நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்பு. இந்த சிறிய விஷயங்கள் அனைத்தையும் நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கேமரா முன் நானாக இருப்பதே எனக்கு ஒரு கல்விதான்” என்று கூறினார்.

ஆனால், அந்த கனவு ஷஃபிக்கிற்கு திடீரென முடிவுக்கு வந்தது. அவர் ஒரு பேட்டியில், “நாங்கள் 52 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம், எனக்கு 15,000 ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்கள். நான் மகிழ்ச்சியடைந்தேன். படப்பிடிப்புக்குப் பிறகு, நான் திரைப்படங்கள் பார்ப்பேன், மும்பையின் தெரு உணவுகளை ரசித்து சாப்பிடுவேன். படம் பெரிய வெற்றி பெற்றது. குடியரசுத் தலைவர் என்னுடன் புகைப்படம் எடுத்தபோது, அது ஒரு கனவு போல இருந்தது. ஆனால் கனவு திடீரென முடிந்தது.

படக் குழு கலைந்து சென்றது. நான் சுமார் எட்டு மாதங்கள் மும்பையின் தெருக்களில் அலைந்தேன், தயாரிப்பாளர்கள் வீட்டு கதவுகளைத் தட்டினேன், ஆனால் அதிர்ஷ்டம் என்னை பார்க்கவில்லை. “நான் மீண்டும் மும்பைக்கு வந்தபோது, 'சலாம் பாம்பே!' பற்றிய செய்திகள் பல செய்தித்தாள்களில் வந்தன. அது ஏதோ ஒரு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில சர்வதேச விருதுகளையும் பெற்றது. அந்த விருதுகளுக்கு யாரும் என்னை அழைக்கவில்லை.

டெல்லியில் நடந்த தேசிய விருது விழாவுக்கு அழைக்கப்பட்டபோதுதான் நான் சென்றேன். நான் ஏராளமான திரைப்பட ஸ்டுடியோக்களுக்கு சென்று வந்தேன், ஆனால் வேலை கிடைக்கவில்லை. நான் செய்தித்தாளில் வெளியான என்னை பற்றிய கட்டுரைகளின் துண்டுகளை எடுத்துக்கொண்டு செல்வேன். பல சமயங்களில், ஒரு ஜூனியர் உதவி இயக்குநர் அந்த துண்டுகளைப் பார்த்து, என் புகைப்படத்தையும் பார்த்து, 'இன்று சாப்பிட்டாயா?' என்று கேட்டார்” என்று ஷஃபிக் மனம் உடைந்த குரலில் கூறினார்.

ஷஃபிக், பிறகு கௌதம் கோஷின் 'பதங்' என்ற ஒரே ஒரு படத்தில் நடித்தார். ஆனால், 1993ல் அவர் மும்பையை விட்டு, பெங்களூருவுக்குத் திரும்பினார். அவர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராக வேலை செய்யத் தொடங்கினார். ஆனால், இந்த முடிவை எடுப்பதற்கு முன், அவர் பல மோசமான தருணங்களை கடந்து வந்தார். “சில நேரங்களில் 'சலாம் பாம்பே!' ஒரு கெட்ட கனவு போல உணர்கிறேன். அந்த திரைப்படமே உண்மையான இந்தியாவின் கெட்ட கனவு. 15 நிமிடங்கள் புகழ் கொடுத்து, அதன் பிறகு ஒன்றுமே இல்லாமல் இருப்பது ஒரு கனவுக்கு சமம். 
அங்கீகாரம், பணம், வெற்றி ஆகியவை ஒருமுறை வந்துவிட்டால், அது உள்ளுக்குள்ளேயே அரித்துக்கொண்டே இருக்கும்.

நான் சினிமாவின் பகட்டை ஒருமுறை கண்டேன். நான் வாழ்ந்த தெரு வாழ்க்கையிலிருந்து வெளியேற ஒரு வழியாக அதைப் பார்த்தேன். என் நிலைமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற அந்த பதற்றம் என்னை பைத்தியமாக்கியது. என் விரக்தி என் வழியில் வந்திருக்கலாம். அல்லது, அது என் விதியோ என்னவோ. 1990களின் தொடக்கத்தில், மும்பையில் என் நேரம் முடிந்துவிட்டது என்பதை நான் அறிந்தேன்.

அது மிகவும் காயப்படுத்தியதால், நான் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன். அதை ஒப்புக்கொள்ள எனக்கு வெட்கமில்லை. ஒருமுறை மும்பையின் சௌபாட்டி கடற்கரையில் கடலில் குதிக்க முயற்சித்தேன்; மற்றொரு முறை பெங்களூரில் விஷம் குடிக்க முயற்சித்தேன். 1994ல் பெங்களூருக்கு திரும்பி வந்தேன், 1996ல் வாழ்க்கைக்காக ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்ட ஆரம்பித்தேன்” என்று ஷஃபிக் மனம் திறந்து பேசினார்.1990களின் மத்தியில் ஷஃபிக்கிற்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். அவர்களில் இருவர், ஷஃபிக் போலவே, பள்ளி படிப்பை பாதியில் விட்டனர்.

என் குழந்தைகள் என்னைப் போல இருக்கக்கூடாது. நான் படித்திருந்தால், யார் கண்டது, நான் ஒரு நடிகராக ஒரு வாழ்க்கையைப் பெற்றிருக்கலாம். நான் கையிலிருக்கும் திரைக்கதைகளைப் படித்திருக்கலாம்” என்று அவர் கூறினார். ஷஃபிக் கடைசியில் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, கன்னட சீரியல்களில் ஒரு தொழில்நுட்ப உதவியாளராக பகுதிநேர வேலைகளைச் செய்யத் தொடங்கினார். “வேறு என்ன செய்ய முடியும்? எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, அவர்களை நான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

cannes-india-8

நான் மும்பைக்கு அந்த ரயிலில் ஏறிச் சென்றபோது என் வாழ்க்கை எப்படி இருந்ததோ, அதே நிலைக்குத் திரும்பிவிட்டது. நான் வெளியில் அதிகமாக பேசுவதில்லை, என் திரைப்படங்களைப் பற்றியும் ஒருபோதும் பேசுவதில்லை. சில சமயங்களில், பெங்களூருக்கு வெளியே படப்பிடிப்பு நடக்கும் போது, திரைப்பட குழுக்களுடன் பயணிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார். 'சலாம் பாம்பே!' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தன்னைப் போன்ற தெருக் குழந்தைகளுக்காக 'சலாம் பாலக்ட்ரஸ்ட்' என்ற அமைப்பை அமைத்தார்கள், ஆனால், தனக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்,

சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில், 'சலாம் பாம்பே!' படத்தில் பணியாற்றிய ஒருவர், ஷஃபிக்கின் சோகமான கதை குறித்து பேசினார். பிஷ்வதிப் தீபக் சாட்டர்ஜி என்பவர், “சலாம் பாம்பே படத்தில் எங்கள் முக்கிய குழந்தை நட்சத்திரமான ஷஃபிக் எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் 87-ல் டப்பிங் செய்து கொண்டிருந்தோம். படப்பிடிப்பு முடிந்ததும் நடந்த விருந்தில், 'இப்போது என்ன?' என்ற நிஜம் அவனை மிகவும் சோகப்படுத்தியது. என்எஃப்டிசியில் அவனுக்கு ஒரு வேலை கொடுக்க முயன்றனர்.

நான் வேலை செய்யும் ஸ்டுடியோவுக்கும் அவன் வந்திருந்தான். அதன் பிறகு, அவன் பெங்களூருக்கு திரும்பி, ஆட்டோ ஓட்டுவதாக கேள்விப்பட்டேன். அவனது நண்பர்களில் ஒருவரான பெர்னார்ட் அதிர்ஷ்டசாலி, ஒளிப்பதிவாளர் அவனை தத்தெடுத்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அழைத்துச் சென்றார். இன்று அவன் ஒரு நல்ல இளைஞனாக வளர்ந்துள்ளான். அவனுக்கு ஒரு அழகான மகளும் இருக்கிறாள்” என்று எழுதினார்.

பெர்னார்ட்டை தத்தெடுத்த ஒளிப்பதிவாளர் சாண்டி சிஸ்ஸல் 2009ல் டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “அவன் சிறியவனாக இருந்தான், நாங்கள் அனைவரும் அவனுக்கு ஐந்து வயது இருக்கும் என்று நினைத்தோம். அவன் ஒவ்வொரு இரவும் என் விருந்தினர் அறை வாசலில் தூங்கினான், இறுதியில் நான் அவனை உள்ளே வந்து குளித்து, ஒரு கட்டிலில் தூங்கச் சொன்னேன். அவனது தாய்க்கு பணம் கொடுத்தால் உதவும் என்று அவர் நினைத்தார், ஆனால் அது நடக்கவில்லை. “சேரிகளில் உள்ள சிறிய குழந்தைகளுக்கு பணம் கொடுத்தால், அது அவர்களிடம் இருக்காது.

நான் பெர்னார்ட்டுக்கு அனுப்பியதை எல்லாம் அவனது தாய் எடுத்துக்கொண்டார். பொம்மைகள் விற்கப்பட்டன. புத்தகங்கள் விற்கப்பட்டன. பணம் எடுக்கப்பட்டது. அவர்கள் அத்தகைய அவநம்பிக்கையில் வாழ்ந்ததால், அவள் உயிர்வாழ வேண்டியதை செய்தாள். அவனது தாயின் காதலன் அவனை சிகரெட்டால் சுட்டுக்கொண்டிருந்தான். அவன் தூக்கத்தில் ஒரு எலியால் கடிபட்டு, நோய்த்தொற்று ஏற்பட்டது. முடிவில்லாத திகில் கதைகள்” என்று சாண்டி கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: