Advertisment

14-வது நாளில் வீழ்ச்சி... உலகளவில் ரூ700 கோடியை தொடுமா? சலார் பாக்ஸ்ஆபீஸ் நிலவரம்

பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடியை கடக்க வாய்ப்புள்ளது. எல்லா காலத்திலும் 12 வது பெரிய இந்திய படமாக மாறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Salaar Prabhas

சாலார் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 14: பிரபாஸ் நடித்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.650 கோடி வசூலித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சலார் திரைப்படம் 14-வது நாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Advertisment

கன்னடத்தில் வெளியாக உக்ரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரஷாந்த் நீல், அடுத்து யஷ் நடிப்பில், கே.ஜி.எஃப்-1, மற்றும் கே.ஜி.எஃப் -2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். அதேபோல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த பிரபாஸ் பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறினார்.

இதனால் இவர்கள் இருவரும் சலார் என்ற படத்தில் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளே பரபரப்பு ஏற்பட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பிரபாஸூடன்?, ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நிலையில், கடைசியாக கடந்த டிசம்பர் 22-ந் தேதி வெளியானது.

ஆங்கிலத்தில் படிக்க : Salaar box office collection day 14: Prabhas now responsible for three of Telugu cinema’s four biggest ever hits; can Prashanth Neel’s blockbuster touch Rs 700 cr?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் முதல் காட்டி முடிவில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் சற்று அதிகமாக இருந்தது. இதனிடையே சலார் படம் வெளியாகி 14-வது நாளில் வசூலில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, சலார் நேற்று ரூ. 4.5 கோடி வசூலித்தது. இதன் மூலம் படத்தின் மொத்த உள்நாட்டு வசூல் ரூ.378 கோடியாக உள்ளது. அதிக முன்பதிவு இருப்பதால், இப்படம் ரூ.400 கோடியை கடக்க வாய்ப்பு உள்ளது.

சாலார் வெளியான முதல் நாளில் ரூ.90 கோடி வசூல் செய்து, முதல் வாரத்தில் மட்டும் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆனால் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், படத்திற்கான வசூலில் பாதிப்பில்லை. பாகுபலி 2 படங்களுக்கு பிறகு பிரபாஸ்க்கு 3-வது பெரிய வெற்றி கொடுத்த படமாக சலார் மாறியுள்ளது. உலகளவில் பாகுபலி 2 வசூலித்ததில் பாதியை சலார் வசூலித்திருந்தாலும்,  பிரபாஸின் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் உள்ள முதல் நான்கு படங்களில் சலார் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஆர் ஆர்அர் படம் சமீபத்தில் உலகளவில் ரூ.650 கோடியை கடந்தது. தற்போது இந்தியில் வெளியான கதர் 2 படத்திற்குப் பிறகு எல்லா காலத்திலும் 12-வது பெரிய இந்தியப் படமாக சலார் உள்ளது. ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான், ரன்பீர் கபூரின் அனிமல், ஆகிய படங்களுக்கு பிறகு 2023 ஆம் ஆண்டின் ஐந்தாவது பெரிய இந்தியப் படமாகும். அனிமல், மற்றும் கதர் 2. இருப்பினும், இந்த படங்கள் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ ஆகிய படங்களை உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் முந்தியுள்ளது.  

பாகுபலி படங்களின் உலகளாவிய வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்த, சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் ஆகிய மூன்று படங்களும் பாக்ஸ்ஆபீஸில் படுதோல்வியை சந்தித்தது. அதேபோல் உலகளவில் மொத்தம் ரூ. 1500 கோடி வசூலித்த பிரஷாந்த் நீல் இயக்கிய இரண்டு கேஜிஎஃப் திரைப்படங்களைத் தொடர்ந்து அவரின் ஹாட்ரிக் வெற்றியா சலார் தொடர்கிறது. பிரபாஸ் அடுத்ததாக கல்கி 2898 AD, சந்தீப் ரெட்டி வாங்காவின் ஸ்பிரிட், சலாரின் அடுத்த பாகம், பின்னர் மாருதி இயக்கத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட படத்தில் நடிக்கவுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Prabhas Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment