பட்ஜெட் ரூ. 90 கோடி; வசூல் ரூ. 900 கோடி... அனுமன் பக்தனாக முஸ்லீம் நட்சத்திரம் நடித்த இந்தப் படம்!

சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 918.18 முதல் ரூ. 969 கோடிக்கு மேல் வசூல் செய்து அதிக வசூலை ஈட்டியதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் சல்மான் தீவிர அனுமான் பக்தராக நடித்திருந்தார்.

சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 918.18 முதல் ரூ. 969 கோடிக்கு மேல் வசூல் செய்து அதிக வசூலை ஈட்டியதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் சல்மான் தீவிர அனுமான் பக்தராக நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
salman khan bajrangi bhaijaan budget and collection Tamil News

சல்மான் கான் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை ரூ. 75 முதல் 90 கோடி பட்ஜெட்டில் தயாரித்ததாக கூறப்படுகிறது.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். சமீபகாலமாக இவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அண்மையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‛சிக்கந்தர்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

Advertisment

இந்த தோல்விக்கு சல்மான்கான் தான் காரணம் என்பது போல், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குற்றம்சாட்டினார். அதாவது, "சல்மான்கானுடன் பணிபுரிவது அத்தனை எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் அவர் படப்பிடிப்பின் போது தாமதமாகதான் வருவார். பகலில் எடுக்க வேண்டிய காட்சிகளை திட்டமிட்டபடி படமாக்க முடியாமல் செயற்கை விளக்குகள் மூலம் படமாக்கினோம்.அவற்றை எல்லாம் சிஜி மூலம் சரி செய்தோம். இதற்கெல்லாம் மேலாக இந்த படத்தின் கடைசி நேரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இதுதான் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது'' என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இப்படி நடிகர் சல்மான்கான் குறித்து பலவிவாதங்கள் எழுந்து வந்தாலும், 10 வருடங்களுக்கு முன்பு அவரது படம் சக்கைபோடு போடத்தான் செய்தது. கடந்த 2015-ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘பஜ்ரங்கி பைஜான்’. இந்தப் படத்தை கபீர்கான் இயக்கியிருந்தார். இதில், கரீனா கபூர், ஹர்ஷால்னி மல்ஹோத்ரா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு  ப்ரிதம் இசையமைத்திருந்தார். சல்மான் கான் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை ரூ. 75 முதல் 90 கோடி பட்ஜெட்டில் தயாரித்ததாக கூறப்படுகிறது. 

Advertisment
Advertisements

சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 918.18 முதல் ரூ. 969 கோடிக்கு மேல் வசூல் செய்து அதிக வசூலை ஈட்டியதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் சல்மான் தீவிர அனுமான் பக்தராக நடித்திருந்தார். இந்தியாவில் தொலைந்து போகும் வாய் பேச முடியாத பாகிஸ்தானியச் சிறுமியை சல்மான்கான் அவளது குடும்பத்தாரிடம் எப்படி சேர்கிறார் என்பதே கதை.

இந்த படம் இரு நாடுகளின் உறவை அன்பால் விளக்க முற்பட்டிருந்தது. இந்த படத்தின் கிளைமேக்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதியில் சிறுமி உடைந்து கதறும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இந்தப் படத்தில் முதலில் அல்லு அர்ஜுன் நடிக்க இருந்ததாகவும் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பஜ்ரங்கி பைஜான்’ படத்தில் நடித்திருந்த சிறுமி ஹர்ஷாலினி மல்ஹோத்ரா தற்போது ‘அகண்டா 2’ படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Salman Khan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: