பண்ணை வீட்டில் பாம்பு கடித்தது: பிறந்த நாள் நெருக்கத்தில் சல்மான்கானுக்கு வந்த சோதனை

கிறிஸ்துமஸ் தினமான நேற்றிவு பன்வேல் பண்ணை இல்லத்தில் வைத்து அவரை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக கமோதேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் சல்மான் கான் நாளை பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், பன்வெல் பண்ணை வீட்டில் விஷமற்ற பாம்பு அவரை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு மருத்துவமனையில் விஷ எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதையடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தெரிவித்தனர்.

கிறிஸ்துமஸ் தினமான நேற்றிவு பன்வேல் பண்ணை இல்லத்தில் வைத்து அவரை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக கமோதேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஆறு மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவர், காலை 9 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் பன்வெல் பண்ணை வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சல்மான் கான் நாளை (டிசம்பர் 27) தனது 56 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரது பிறந்தநாளை பாரம்பரிய முறையில் நண்பர்கள், குடும்பத்தினருடன் பன்வெல் பண்ணை வீட்டில் கொண்டாடுவது வழக்கம். கொரோனா காரணமாக, பண்ணை வீட்டில் சல்மான் கான் வசித்து வந்துள்ளார்.

சல்மான் தற்போது ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் 15 இன் தொகுப்பாளராகக் காணப்படுகிறார். மேலும், டைகர் 3 படத்தன் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பிறந்தநாள் சமயத்தில் அவரை பாம்பு கடித்த சம்பவம், ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Salman khan bitten by non venomous snake at panvel farmhouse

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com