Advertisment

சல்மான் கானின் அடுத்த ரேஸ் ஆரம்பம்!

வரும் ரம்ஜான் தினந்தன்று இந்த திரைப்படம் வெளியாகவும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சல்மான் கானின் அடுத்த ரேஸ் ஆரம்பம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது அடுத்த படமான ரேஸ்3 படம் குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

நடிகர் சல்மான்கான் தற்போது ரேஸ் 3 என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரெமோ டிசைவுசா இயக்க,ரமேஷ் தவுரானி தயாரிக்கிறார். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் ரேஸ்3  திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.  ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் சல்மான்கான், இந்த படத்திற்காக உடம்பினை குறைத்து, மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.

பாபி தியோல், ஜாக்குலின் பெர்னாண்டஸ், விக்கி கவுசல் போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ரம்ஜான் தினந்தன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் குறித்த வீடியோ ஒன்றை சல்மான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த அவரது,ரசிகர்கள் பலர்,படம் குறித்த எதிர்ப்பார்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக  தெரிவித்துள்ளனர். சல்மான் கானின் குரலில் ஒலிக்கும், இந்த வீடியோவை பார்த்த  பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  தற்போது இந்த படத்தின்   இறுதிக்கட்க படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் மும்பை பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின்  டீசரும் வெளியாகவுள்ளது.

,

Race 3
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment