/tamil-ie/media/media_files/uploads/2018/06/salman-khan.jpg)
salman khan, salman khan fan selfie
Salman Khan snatches phone of a fan : நடிகர் சல்மான் கான் கோவா விமான நிலையத்தில் தனது அனுமதியின்றி செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்ஃபோனை பறித்து வீசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
முதல் நாளே பழைய நினைவுகளை மீட்டெடுத்து ‘சபாஷ்’ வாங்கிய சித்தி 2!
சல்மான் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதை அந்த வீடியோ-வில் காணலாம். அப்போது ரசிகர் ஒருவர் சல்மானுடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார். அப்போது கோபமடைந்த சல்மான் ரசிகரின் கையிலிருந்து செல்ஃபோனை பறித்து விடுகிறார். சல்மானின் அடுத்தப் படமான ’ராதே’ படத்தின் படபிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது.
Arrogant #SalmanKhan
Misbehaving with Fans @BeingSalmanKhanpic.twitter.com/H0ujQPHzrP
— FilmyKida (@itsFilmyKida) January 28, 2020
இந்நிலையில் செல்பி எடுக்க முயன்ற அந்த நபர் விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் என கண்டரியப்பட்டுள்ளதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. "முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அந்த வீடியோ வைரலாகியபோது, நாங்கள் சம்பவம் குறித்து விசாரித்து அதை உறுதிப்படுத்தினோம்" என்று விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் ஃபோனை நடிகர் சிவக்குமார் தட்டி விட்டது, தமிழகத்தில் பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பு : இந்தியாவின் உதவியை நாடுகிறது சீனா
தவிர, சல்மானுடன் ரந்தீப் ஹூடா மற்றும் திஷா பதானி ஆகியோர் இணைந்து நடிக்கும் ’ராதே’ ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது. மும்பை மிரர் அறிக்கையின்படி, 20 நிமிட சண்டைக் காட்சிக்கு, ரூ .7.5 கோடியை செலவிட்டுள்ளார்களாம் தயாரிப்பாளர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us