சாம் விஷால், இசைவாணி, மாஸ்டர் நடிகர் – பிக் பாஸ் போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

Sam Vishal Isaivani and many Bigg Boss Tamil 5 Contestants Tamil News அனைத்து போட்டியாளர்களும் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான சொகுசு விடுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

Sam Vishal Isaivani and many Bigg Boss Tamil 5 Contestants Tamil News
Sam Vishal Isaivani and many Bigg Boss Tamil 5 Contestants Tamil News

Sam Vishal Isaivani and many Bigg Boss Tamil 5 Contestants Tamil News : தமிழ்நாட்டு மக்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் 3 நாட்களில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், யாரெல்லாம் இம்முறை  இந்நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளார்கள் என்கிற விவாதம் மிகத் தீவிரமாக சமூக வலைத்தளங்களில் சென்றுகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது, சூப்பர் சிங்கர் சாம் விஷால், மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்த சிபி புவன சந்திரன், கானா பாடகி இசைவாணி ஆகியோர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கெனவே குக் வித் கோமாளி கனி, விஜய் டிவி ஜாக்குலின், தொகுப்பாளினி பிரியங்கா, ஷகிலா மகள் மிலா, தொழிலதிபர் ரேணுகா பிரவீன், பாவனி ரெட்டி, கோபிநாத் ரவி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளதாக வதந்திகள் வெளிவந்தன. இந்த லிஸ்டில், சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் இணைந்திருக்கிறார். ஏற்கெனவே ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் சாம் விஷால், இந்நிகழ்ச்சியில் எப்படியெல்லாம் பாடி அசத்தப்போகிறார் என்பதைப் பற்றிப் பகிர்ந்து வருகின்றனர்.

கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதைப் பார்க்க பிக் பாஸ் தமிழ் பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், பிரபல கானா பாடகி இசைவாணி கலந்துகொள்ளப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020-ம் ஆண்டில், பிபிசி 100 மகளிர் விருதுகளில் ஒன்றில் அவர் செய்த சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் தமிழ் 5-ல், இசைவாணியின் பங்களிப்பைப் பார்க்கத் தமிழ் பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும், மாஸ்டர் படத்தில் விஜயின் மாணவராக நடித்த தமிழ் நடிகர் சிபி புவன சந்திரன் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்குபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் கோவிட் -19 விதிமுறைகள் காரணமாக, தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் பட்டியலிடப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான சொகுசு விடுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sam vishal isaivani and many bigg boss tamil 5 contestants tamil news

Next Story
Vijay TV Serial: கடற்கரையில் சந்திப்பு; கனிவான பேச்சு; பழைய பாரதி… பழைய கண்ணம்மா!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X