உடல் நல பிரச்சனை காரணமாக நடிப்பில் இருந்து விலகி இருந்த நடிகை சமந்தா 7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீ-என்டரி கொடுக்க உள்ளதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வ செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான யசோதா, சகுந்தலம் உள்ளிட்ட சில படங்கள் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.
கடைசியாக கடந்த ஆண்டு வெளியாக குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனிடையே மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டே படங்களில் நடித்து வந்தார். சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வந்த சமந்தா, புதியதாக படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.
தி பேமிலி மேன் 2 சீரிஸ் மூலம் இந்தியில் நடித்த சமந்தா, அந்த வெப் சீரிசை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது சமந்தா புதிய படங்களில் கமிட் ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இதனிடையே தான் மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாக சமந்தா அறிவித்துள்ளார்.
நான் மீண்டும நடிப்புக்கு திரும்புகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் எனது நண்பருடன் இணைந்து ஹெல்த் போட்காஸ்ட் உருவாக்கினேன். இது குறித்து அடுத்த வாரம் வெளியிடுகிறேன். இது பலருக்கும் பயனுளள்தாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இதனிடையே தற்போது சமந்தா வெளியிட்டுள்ள புதிய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் “சிறுவயதில் நான் எப்போதும் எங்கள் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட புத்தகங்களைப் படிப்பேன். நான் எந்த விஷயத்திலும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்வதை விரும்புவேன். இப்போது, பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கே என்னைக் காண்கிறேன்! பிடிவாதம் இன்னும் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்! என் மனம் சலசலக்கிறது... என் குறிப்புகள் நிரம்பிவிட்டன... இதனை உங்களிடம் பகிர்ந்துகொள்ள இனியும் என்னால் காத்திருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
சமந்தா மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தயில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் அவரது புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள் எனப் பலரும் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். உடல் தாக்க நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, தனது உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்க திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“