Advertisment
Presenting Partner
Desktop GIF

சமந்தா குடும்பத்திற்கு புதிய வரவு; கொஞ்சி மகிழும் வைரல் போட்டோ

நடிகை சமந்தா குடும்பத்தில் இணைந்த புதிய நபர்; வெளியானது பாச மழை பொழியும் புகைப்படம்; இணையத்தில் வைரல்

author-image
WebDesk
New Update
samantha

நடிகை சமந்தா குடும்பத்தில் இணைந்த புதிய நபர்; வெளியானது பாச மழை பொழியும் புகைப்படம்; இணையத்தில் வைரல்

நடிகை சமந்தா, தனது குடும்பத்திற்கு புதிய நபர் ஒருவரை வரவேற்றுள்ளார். அவருடன் அன்பு மழை பொழிந்து, நேரம் செலவிட்ட, இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா மாயோசிட்டிஸ் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்காக சினிமாவில் இருந்து ஆறு மாதம் விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதே போல் தன்னுடைய வழக்கமான ஜிம் ஓர்க் அவுட்டையும் சமந்தா துவங்கியுள்ளார். மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கிறங்கடிக்கும் அழகை புகைப்படங்களாக வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

விரைவில் சமந்தா அமேசான் பிரைம் வீடியோவுக்காக நடித்து முடித்துள்ள வெப் சீரிஸ் சிட்டாடல் தொடர் இந்திய பதிப்பில் வெளியாக உள்ளது. இதனை ராஜ் & டி.கே ஆகியோர் இயக்கி உள்ளனர். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் சென்னை ஸ்டோரிஸ் திரைப்படத்தில் சமந்தா ரூத் பிரபு ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சமந்தா நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய செல்ல பிராணிகளான ஹாஷ் மற்றும் சாஷாவுடன் நேரம் செலவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தநிலையில், சமந்தா தனது குடும்பத்திற்கு புதிய பூனை ஒன்றை வரவேற்றுள்ளார். ஜெலடோ என பெயரிடப்பட்ட இந்த பூனை கருப்பு மற்றும் சாம்பல் நிறம் கொண்ட, பாரசீக (பெர்ஷியன்) ரக பூனையாகும்.

சமந்தா தன்னுடைய ஒர்க் அவுட் முடிந்து, தன்னுடைய செல்ல பிராணி மீது மண்டியிட்டு படுத்து கொண்டு, அன்பு மழை பொழியும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமந்தா இந்த புகைப்படத்தை பகிர்ந்து, "நாளைய உற்சாகம் மற்றும் என் பூனையும் அப்படிதான்" என கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment