96 தெலுங்கு ரீமேக்: ”எனக்கு சவால் விட்ட இன்னுமொரு கேரக்டர் ஜானு” – சமந்தா

96 Telugu Remake: ட்ரீம் டீமாக இருந்ததற்காக எனது இயக்குனர் பிரேம் மற்றும் கோ-ஸ்டார் ஷர்வானந்திற்கு நன்றி

Samantha Akkineni, 96 Telugu Remake
Samantha Akkineni, 96 Telugu Remake

Samantha Akkineni: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘96’ திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இயக்குநர் பிரேம் குமார் இயக்கியிருந்த அப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி 1 வருடம் ஆகியும் கூட, இன்னும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றதோடு, ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நிறைய பாஸிட்டிவ் விமர்சனங்களை 96 திரைப்படம் பெற்றது.

மோடி – ஜின்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

தமிழில் சூப்பர் ஹிட்டான அப்படம், இயக்குநர் ப்ரீதம் குப்பி இயக்கத்தில் பவானா மற்றும் கணேஷ் ஆகியோரின் நடிப்பில்,’99’ என கன்னடத்தில் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. இப்போது, 96 படம் தெலுங்கிலும் உருவாகியிருக்கிறது.

96 படத்தில் தெலுங்கு ரீமேக்கை ஒரிஜினல் இயக்குநர் பிரேம் குமார் இயக்கி வருகிறார். தமிழைத் தொடர்ந்து, தெலுங்கிலும் கோவிந்த் வஸந்தாவே இசையமைக்கிறார். சமந்தா மற்றும் ஷர்வானந்த் ஆகியோர் த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு பதிப்பின் தலைப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கைப் பற்றி புதிய அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார் சமந்தா. ”இது முடிந்துவிட்டது!! நேற்றையதை விட என்னைச் சிறப்பாக செயல்பட சவால் விட்ட இன்னொரு படத்தின் பாத்திரம். ட்ரீம் டீமாக இருந்ததற்காக எனது இயக்குனர் பிரேம் மற்றும் கோ-ஸ்டார் ஷர்வானந்திற்கு நன்றி ???? # ஜானு .. எனது சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன். எப்போதும் நன்றியுள்ளவள்” என அதில் தெரிவித்திருக்கிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samantha akkineni 96 telugu remake janu

Next Story
பிகில் ட்ரைலர்: மைக்கேல், ராயப்பன் என இரு வேடங்களில் மாஸ் காட்டும் விஜய்!Thalapathy vijay, thalapathy vijay movies, vijay dance hits, vijay songs, தளபதி விஜய், விஜய் பாடல்கள், விஜய் டான்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X