Samantha Akkineni: முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா அக்கினேனி தனது ஓய்வு நேரத்தின் போது, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் கூட, தனது தோழியும் வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டியுடன் நேரம் செலவிடுவதைக் காண முடிந்தது. ஷில்பா வடிவமைப்பாளர் மட்டுமல்லாமல், அழகிப் போட்டி வெற்றியாளர், உடற்பயிற்சி ஆர்வலர், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி ப்ளாகர், செல்லப்பிராணிகளின் காதலி என சொல்லிக் கொண்டே போகலாம்.
https://www.instagram.com/tv/CBu8946jyMO/?utm_source=ig_web_copy_link
இந்நிலையில் தற்போது ஷில்பா தனது சமூக ஊடகங்களில், கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதை எவ்வாறு சமாளிக்க முடிந்தது என்பதையும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர்களை சந்தித்த ஒரு குடும்ப நண்பர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பதை நினைவு கூர்ந்த அவர், ஐந்து நாட்களுக்குப் பிறகு குடும்ப நண்பரின், வீட்டு உறுப்பினர் ஒருவர் COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
,
ஷில்பா ரெட்டி மற்றும் அவரது கணவர் இருவரும் வைரஸுக்கு நேர்மறையான சோதனையைப் பெற்றனர். மேலும் அவர்கள் அறிகுறியற்றவர்களாக இருந்தனர். இப்போது, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டத்தைப் பின்பற்றி, இந்த உயிர்க்கொல்லி வைரஸுக்கு எதிராக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நன்கு சீரான உணவுத் திட்டத்தைப் பகிர்ந்துகொண்ட ஷில்பா, அனைவரும் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஷில்பா ரெட்டியை அழுத்தமாக முத்தம் கொடுக்கும் படத்தைப் பகிர்ந்திருந்தார் சமந்தா. அந்த படம் பழையதா? அல்லது அப்போது தான் எடுக்கப்பட்டதா என்பது குறித்து ரசிகர்கள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியுள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”