Samantha Akkineni: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளியான ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை அவர் வளர்த்துள்ளார். அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ள சமந்தா, எப்படி இதை சுலபமாக செய்வது என்ற டிப்ஸையும் கொடுத்துள்ளார். ஒரு ட்ரே, தேவையான விதைகள், ஒரு ரூம் இருந்தால் போதுமாம், சமந்தாவை போல வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்யலாம்.
,
”முட்டைக்கோஸ் மைக்ரோகிரீன்கள் எனது முதல் அறுவடை. ஆர்வமுள்ளவர்களுக்கு... உங்களுக்குத் தேவையானது ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை (நான் எனது படுக்கையறையைப் பயன்படுத்தினேன்), அதில் ஒரு ஜன்னல் உள்ளது. இது சூரிய ஒளியை ஓரளவுக்கு அனுமதிக்கிறது. தட்டில் அதிக சூரிய ஒளி கிடைக்காவிட்டால், அதன் அருகே ஒரு படுக்கை விளக்கு வைக்கலாம் 1. கோகோபீட்டை தட்டில் நிரப்பவும்... 2. விதைகளை தெளிக்கவும். 3. கோகோபீட் முற்றிலும் ஈரப்பதமாகும் வரை, தாராளமாக தண்ணீரை தெளித்து தட்டில் மூடி வைக்கவும். உங்கள் வீட்டின் மிகச்சிறந்த பகுதியில், ஜன்னலுக்கு அருகில் தட்டை வைக்கவும். சூரிய ஒளி குறைவாக இருந்தால் நீங்கள் படுக்கை விளக்கைப் பயன்படுத்தலாம் (நான் அதை தான் செய்தேன்). 4 நாட்களுக்கு அதை அப்படியே விடுங்கள். (நீங்கள் அது முளைப்பதை தினமும் சரிபார்க்கலாம்). 5 வது நாளில் இருந்து தினமும் ஒரு முறை தாராளமாக தண்ணீரை தெளிக்கவும். 8-ம் நாளில் இருந்து 14-ம் நாள் வரை, உங்கள் மைக்ரோகிரீன்களை எப்போது வேண்டுமானாலும் அறுவடை செய்யலாம்” என ரசிகர்களுக்கு டிப்ஸும் கொடுத்திருக்கிறார் சமந்தா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”