Advertisment

’பாதை வேறு வேர் ஒன்று தான்’: அண்ணன்கள் குறித்து உருக்கமான சமந்தா!

”நாங்கள் வளர்ந்து வேறு பாதைகளில் சென்று விட்டோம். ஆனால் நம்முடைய வேர் ஒன்று தான். மிகவும் மிஸ் செய்கிறேன்''

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samantha, samantha akkineni, samantha akkineni childhood picture

samantha, samantha akkineni, samantha akkineni childhood picture

Samantha Akkineni: கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளனர். அந்தவகையில் நடிகை சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து கடந்த வாரம் அறுவடை செய்தார்.

’டிக் டாக்’ மாப்பிள்ளையால் ஏமாந்த பூர்ணா: 4 பேரை கைது செய்த கேரள போலீஸ்

,

CBSE: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தித்திப்பான செய்தி.. 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிறுவயது போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் குழந்தையான சமந்தாவை அவரது அம்மா தூக்கி வைத்திருக்க உடன் இரண்டு அண்ணன்களான ஜொனதன் பிரபு , டேவிட் பிரபு இருவரும் இருக்கிறார்கள். ”நாங்கள் வளர்ந்து வேறு பாதைகளில் சென்று விட்டோம். ஆனால் நம்முடைய வேர் ஒன்று தான். மிகவும் மிஸ் செய்கிறேன்'' என்று அந்தப் படத்தின் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவிர, சமந்தா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment