Samantha Akkineni: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா அக்கினேனி, ”மஜிலி, ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ்” போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியிருக்கிறார்.
சிறந்த நடிகை என்பதுடன் தனது ஃபேஷன் தேர்வுகளால் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் சாம். அது ரெட் கார்பெட் அல்லது எந்தவொரு புரொமோஷன் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தனது தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து பெண்களுக்கு பல ஃபேஷன் கோல்களைக் கொடுக்கிறார். இவற்றைத் தவிர, ஃபிட்னெஸ் விஷயத்திலும் சமந்தாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.
Advertisment
Advertisements
தனது லிமிட்டைத் தாண்டி ஜிம்மில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சமந்தா. அவரது சமீபத்திய ஒர்க் அவுட் வீடியோ முக்கிய உடற்பயிற்சி கோல்களை நமக்குக் கூறுகிறது. இன்ஸ்டாகிராமில் சமந்தா பகிர்ந்திருக்கும் அவரது ஒர்க் அவுட் வீடியோ, நம்மையும் ஜிம்மை நோக்கி ஓட வைக்கும்.
சமந்தா அக்கினேனி தனது ஹெவிவெயிட் ஒர்க் அவுட்டை ஒரு பாஸைப் போல செய்கிறார். உடலின் மீதும் ஆரோக்கியத்தின் மீதும் சமந்தா கொண்டுள்ள அக்கரையை இந்த வீடியோ காட்டுகிறது. அதோடு, உணவுக் கட்டுப்பாட்டிலும் சமந்தா மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆனவர். சாம் தனது ஒர்க் அவுட் வீடியோவைப் பகிர்வது இது முதல் தடவையல்ல. சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ள சமந்தா, தனது ஃபிட்னெஸ் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தவிர, ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது சமந்தா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது!