Samantha in Ibiza: ஸ்பெயினில் உள்ள இபிசாவில் தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்து வருகிறார் நடிகை சமந்தா. ஆகஸ்ட் 29-ம் தேதி நாகார்ஜுனாவின் பிறந்தநாள். அவரது 60-ம் பிறந்தநாளான இதனைக் கொண்டாட அக்கினேனி குடும்பம் ஸ்பெயினுக்கு பறந்தது. சாமந்தா மற்றும் நாகச்சைதன்யா அந்த ஸ்பானிஷ் தீவில் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் சமந்தா பகிர்ந்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இபிசாவில் தான் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் படங்கள் 8.9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளன.
சிலர் சமந்தாவின் இந்தப் படங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திருமணமான நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று இப்படி அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுப்பது சரியா? என தமிழ் ரசிகர்கள் சிலரே சமந்தாவின் சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சில ரசிகர்கள், ‘இதில் என்ன தவறு?’ என்கிற விதமாக சமந்தாவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள்.
தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது சமந்தா நடித்து வருகிறார். இந்தப் படத்தை தமிழில் 96 படத்தை இயக்கிய, பிரேம் குமார் இயக்குவது குறிப்பிடத் தக்கது!