/tamil-ie/media/media_files/uploads/2019/08/sam.jpg)
Samantha Akkineni, Naga Chaitanya, Samantha Naga Chaitanya, chay sam, Samantha Akkineni vacation photo, Samantha Naga Chaitanya vacation, Samantha Naga Chaitanya photos, சமந்தா, நாக சைதன்யா, ஸ்பெயின், போட்டோஸ், இன்ஸ்டாகிராம்
நடிகை சமந்தா, கணவர் நாக சைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டில் பொழுதை கழித்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவும் , நடிகை சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர். 8 வருட காதலுக்குப் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிஸியாக இருந்தாலும், மனம், ஆட்டோ நகர் சூர்யா, மஜிலி, உள்ளிட்ட திரைப்படங்களிலும் இணைந்து நடித்தனர்.
சமந்தாவின் ஸ்பெயின் போட்டோ கலெக்சன் இதோ..
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது கணவருடன் இணைந்திருக்கும் அழகிய தருணங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சமந்தா பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே ஆதரவைப் பெற்று வருகிறது.
ஸ்பெயின் சென்றுள்ள சமந்தா - நாக சைதன்யா ஜோடி அங்கு விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தான் சமந்தா பதிவிட்டிருக்கிறார்.
சமந்தா அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.