Samantha Akkineni No Makeup Look: வலுவான கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல, தனது உடை, மேக்கப் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றாலும் ரசிகர்களின் மனதை வென்று ஸ்டன்னராக வலம் வருகிறார் நடிகை சமந்தா அக்கினேனி.
Advertisment
இறுதியாக ‘ஓ பேபி’ திரைப்படத்தில் நடித்திருந்த சமந்தா, மேக்கப் இல்லாத வெற்று முகத்துடன், ஃபில்டர் இல்லாத செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த மேக்கப் இல்லாத செல்ஃபியில் தென்னிந்திய நடிகை சமந்தா முன்பு எப்போதையும் விட அழகாக இருக்கிறார்."ஃபில்டர் இல்லாதது!!!! கையால் நான் என்ன செய்கிறேன் என்று என்னிடம் கேட்க வேண்டாம்." என்ற கேப்ஷனோடு அதனை சமந்தா பகிர்ந்திருக்கிறார்.
இதற்கிடையில், சமந்தா அக்கினேனி சமீபத்தில் தான் தனது விடுமுறையை ஸ்பெயினில் கழித்து விட்டு திரும்பினார். தனது கணவர் நாக சைதன்யா மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் நாகார்ஜுனாவின் 60-வது பிறந்த நாளை ஸ்பெயினின் இபிசாவில் அவர் கொண்டாடினார். கடற்கரை மற்றும் இசை நிகழ்ச்சியின் போது நேரத்தை அனுபவிக்கும் சமந்தாவின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. குறிப்பாக இசை நிகழ்ச்சியின் போது சமந்தா அக்கினேனி, சைதன்யாவுடன் நடனமாடிய வீடியோக்கள் ஹார்ட்டின் லைக்குகளைப் பெற்றது குறிப்பிடத் தக்கது.