Advertisment

கணவருடன் நேருக்கு நேர் மோதும் சமந்தா.. ரசிகர்கள் யார் பக்கம்?

திருமணத்திற்கு பிறகு இவருவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் வெளியாகின.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சமந்தா

சமந்தா

சமந்தா  தனது கணவர் நாகசைதன்யா உடன்   திரையில்  நேருக்கு நேர் மோதிக் கொள்கிறார்.  இருவரில் யாருக்கு வெற்றி என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய போகிறார்கள்.

Advertisment

சமந்தா  நாகசைதன்யா ஜோடி:

சினிமாவில் கலக்கி வந்த சமந்தா - நாகசைதன்யா ஜோடிகள்  சென்ற வருடம் திருமணத்தில் இணைந்தனர்.  கோவாவில் பிரம்மாண்டமாக அரங்கேறிய இவர்களின் திருமணத்தைக் கண்டு வியப்படையாத பிரபலங்களே இருக்க மாட்டார்கள்.

திருமணத்திற்கு பிறகும் ட் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். ஒருபக்கம் குடும்பம் மறுபக்க சினிமா என்று சரியாக பேலன்ஸ் செய்து  பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.  நண்பர்கள் தினத்தன்று தனது குடும்ப நலனுக்காக கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரை நடந்தே சென்று நேர்த்திகடனையும் நிறைவேற்றினார்.

சமந்தா சமந்தா நாகசைதன்யா

இப்படி மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு புதிய யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. இதில் வெற்றியை முடிவு செய்யப் போகிறவர்கள் ரசிகர்கள் மட்டுமே.

தெலுங்கில் நாகசைத்தன்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’. இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இப்படத்தில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக அனு இம்மானுவேல் டூயட் பாடி ஆடியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே நாளில்,பிரபல நடிகையும், நாகசைத்தன்யாவின் காதல் மனைவியுமான சமந்தா நடித்துள்ள ‘சீமராஜா’ (தமிழ்) மற்றும் ‘யு-டர்ன்’ (தமிழ்/தெலுங்கு) ஆகிய 2 படங்களும் ரீலிஸ் ஆகிகிறது. திருமணத்திற்கு பிறகு இவருவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் வெளியாகின.

ஆனால், முதன் முறையாக இருவரின் படங்களும்  தனித்தனியாக  ஒரே நாளில் ரிலீஸாவது இதுவே முதன்முறை. இதனால்  இருவரின் ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துய்க் கொண்டிருக்கின்றனர்.

Samantha Ruth Prabhu Naga Chaitanya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment