/tamil-ie/media/media_files/uploads/2019/08/Samantha.jpg)
சமந்தா
Samantha Akkineni: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும், சமந்தா அக்கினேனி தனது தனிப்பட்ட திறன்களால் ரசிகர்களை கவர்கிறார். நடிப்பை தவிர, ஃபேஷன், ஃபிட்னெஸ் போன்றவற்றில் தனி கவனம் செலுத்தி வரும் சமந்தா, அது சம்பந்தமான படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமந்தாவா இது....நம்ம கண்ணை நம்மளாலேயே நம்பமுடியலயே.....
இந்நிலையில் தற்போது, ஜிம்மில் தான் செய்த ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். தனது அடுத்தப் படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சிக்கென தனையே நேரம் ஒதுக்கி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் சமந்தா.
அந்த வீடியோவில் அத்தனை நேர்த்தியாக ’கார்ட் வீல்’ அதாவது ’பல்டி’ அடிக்கிறார் சமந்தா. இதைப் பார்ப்பவர்களுக்கு, ஃபிட்னெஸில் ஓர் இன்ஸ்பிரேஷன் ஏற்படுகிறது. இதற்கிடையே ஒரு ஆரோக்கியம் சார்ந்த பத்திரிக்கைக்கு, சமந்தா அளித்திருந்த இண்டெர்வியூவில், ஞாயிற்றுக் கிழமை தனது டயட் பிளானில் ‘சீட் டே’ எனவும், அந்நாளில் தான் தனக்குப் பிடித்த பிரியாணி, இறால் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தவிர, தமிழில் வெளியான ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது சமந்தா நடித்து வருகிறார். இதில் த்ரிஷா நடித்திருந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.