ஹாலிவுட் நடிகர்களுக்குப் பிறகு இதை செய்தது சமந்தா தான்!

Samantha’s Parkour Act: ராணுவ வீரரைப் போன்று உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவரால் மட்டுமே இதனை சரிவர செய்ய முடியும். 

samantha parkour act
Samantha Ruth Prabhu

Samantha Akkineni: தெலுங்கில் வெளியான ‘ஓ பேபி’ திரைப்படம் சமந்தாவுக்கு பெரும் வரவேற்பைப் பெற்று தந்தது. ஹீரோயினை முன்னிலைப் படுத்தும் கதைகளில் நடிக்கும் ஆர்வம் சமந்தாவையும் விட்டு வைக்கவில்லை. இதற்கு முன்பு ‘யூ டர்ன்’ படத்தில் நடித்தவர் சமீபத்தில் ‘ஓ பேபி’ படத்தில் நடித்திருந்தார். இவையிரண்டுமே சமந்தாவை முன்னிலைப் படுத்தி இயக்கப்பட்ட படங்கள் தான்!

இந்நிலையில் சமந்தாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் அனைவரையும் வியக்க வைக்கிறது. பர்கவுர் ஆக்டிவிட்டீஸ் என சொல்லக் கூடிய, அதிக உயரம் (ஜம்ப்) தாண்டுதல் தான் அது. அந்த வீடியோவில் சமந்தாவின் பாஸிட்டிவ் அதிர்வும், தன்னம்பிக்கையும் தாறுமாறாக வெளிப்படுகிறது. இதனை ஹாலிவுட் ஹீரோக்கள் மற்றும் வில்லன்கள் செய்வதை தான் நாம் இது வரையில் பார்த்திருக்கிறோம். ராணுவ வீரரைப் போன்று உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவரால் மட்டுமே இதனை சரிவர செய்ய முடியும்.

சர்வ சாதாரணமாக 32 வயதாகும் சமந்தா இந்த பர்கவுர் ஆக்டிவிட்டீஸை செய்திருப்பதைப் பார்த்து மூக்கின் மீது விரல் வைக்கிறார்கள் ரசிகர்கள்.  ஃபேஷனில் தொடங்கி ஃபிட்னெஸ் வரை சும்மா தெறிக்க விடுகிறார் சமந்தா.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samantha akkineni shares parkour act on instagram

Next Story
அன்னபூரணி ஆட்டம் நிற்குமா? ரோஜாவை காப்பாற்றுவாரா அர்ஜூன்?suntv roja serial roja
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com