/tamil-ie/media/media_files/uploads/2020/09/Samantha-Akkineni-turned-as-fashion-designer.jpg)
சமந்தா அக்கினேனி
Samantha Akkineni: நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து, ரசிகர்களைக் கவர்ந்தவர். திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து, வெற்றிகளை குவித்துள்ளார்.
சமந்தாவின் புதிய நிகழ்ச்சிதனது மாமனார் நாகார்ஜுனாவின் படப்பிடிப்புத் திட்டங்கள் காரணமாக சமீபத்தில், பிக் பாஸ் 4 தெலுங்கை தொகுத்து வழங்கினார். இப்போது ஒரு நிகழ்ச்சிக்கு முழு ஹோஸ்டாக புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். ஆம் இப்போது சமந்தா, ஒரு டாக் ஷோவை தொகுத்து வழங்குகிறார். இது OTT தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.
சிறப்பு விருந்தினர்கள்சமந்தாவின் அந்த நிகழ்ச்சிக்கு ’சாம் ஜாம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, சாய்னா நேவால், தமன்னா, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தன்னா, விஜய் தேவரகொண்டா போன்ற பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கிறார்கள். தீபாவளி ஸ்பெஷலாக, நவம்பர் 13-ஆம் தேதி ’ஆஹா வீடியோ’ என்ற OTT மேடையில் ஒளிபரப்பாகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us