Samantha Akkineni: நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து, ரசிகர்களைக் கவர்ந்தவர். திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து, வெற்றிகளை குவித்துள்ளார்.
தனது மாமனார் நாகார்ஜுனாவின் படப்பிடிப்புத் திட்டங்கள் காரணமாக சமீபத்தில், பிக் பாஸ் 4 தெலுங்கை தொகுத்து வழங்கினார். இப்போது ஒரு நிகழ்ச்சிக்கு முழு ஹோஸ்டாக புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். ஆம் இப்போது சமந்தா, ஒரு டாக் ஷோவை தொகுத்து வழங்குகிறார். இது OTT தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.
சமந்தாவின் அந்த நிகழ்ச்சிக்கு ’சாம் ஜாம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, சாய்னா நேவால், தமன்னா, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தன்னா, விஜய் தேவரகொண்டா போன்ற பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கிறார்கள். தீபாவளி ஸ்பெஷலாக, நவம்பர் 13-ஆம் தேதி ’ஆஹா வீடியோ’ என்ற OTT மேடையில் ஒளிபரப்பாகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Samantha akkineni turned talk show host
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்