New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Samantha.jpg)
சமந்தா
இதற்கு காரணம் என் கணவர்தான். நானும் அவரும் சேர்ந்துதான் இப்படி யோகா செய்து வருகிறோம்.
சமந்தா
Samantha Akkineni : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார். தற்போது முழு ஊரடங்கில் ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் சமந்தா, கார்டனிங் மற்றும் ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதோடு அடுத்ததாக, விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
,
View this post on InstagramA post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். கைகளை தரையில் ஊன்றி, அந்தரத்தில் பறந்தவாறு அவர் செய்யும் யோகா புகைப்படத்தை பகிர்ந்துள்ள சமந்தா, ''கார்டனிங்கிற்கு பிறகு நான் என்ஜாய் செய்யும் இன்னொரு விஷயம் இந்த யோகா தான். இதற்கு காரணம் என் கணவர் தான். நானும் அவரும் சேர்ந்துதான் இப்படி யோகா செய்து வருகிறோம். ஆனால் இந்தப் படத்தில் அவர் இல்லை'' என பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தவிர, கொரோனாவிலிருந்து மீண்ட வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டியை வாழ்த்தியுள்ளார் சமந்தா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.