New Update
/indian-express-tamil/media/media_files/NM94V5MEcQi7Bto2568t.jpg)
பிரபல டிவியின் ரியாலிட்டி ஷோவில் சமந்தா
பிரபல டிவியின் ரியாலிட்டி ஷோவில் சமந்தா; வெளியான வைரல் புகைப்படம்; ரசிகர்கள் ஹேப்பி
பிரபல டிவியின் ரியாலிட்டி ஷோவில் சமந்தா
பிரபல டிவியின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடிகை சமந்தா பங்கேற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. குறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சமந்தா, தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். 'ஃபேமிலி மேன் 2' என்ற இந்தி தொடருக்குப் பிறகு நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் சமந்தா பல விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமன்றி தொழில், நிகழ்ச்சி தொகுப்பு என பன்முக தன்மை கொண்டவராக இருந்து வரும் சமந்தா, திடீரென மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக சினிமா துறையில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், 'எம் டிவி ஹஸ்டில் சீசன் 3' (MTV Hustle Season 3) என்ற ரியாலிட்டி ஷோ எம் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடுவராக நடிகை சமந்தா பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் பாப் பாடகர் பாட்ஷா நிகழ்ச்சியில் சமந்தாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நடுவர் இருக்கையில் பாடகர் பாட்ஷா அருகில் நடிகை சமந்தா அமர்ந்துள்ளார். இருவரும் சிரித்தவாறு இருக்கும் புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.