சமந்தாவையே “வாவ்” சொல்லவைத்த வீடியோ

Samantha instagram video : சமந்தாவுக்கு அவரது ரசிகர் அனுப்பிய வீடியோ, சமந்தாவை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதனை, சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ, நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

samantha, fans video, instagram, samantha akkineni, oh baby, theri rangasthalam, samantha dress
samantha, fans video, instagram, samantha akkineni, oh baby, theri rangasthalam, samantha dress, சமந்தா, இன்ஸ்டாகிராம், வீடியோ, சமந்தா அக்கினேனி

சமந்தாவுக்கு அவரது ரசிகர் அனுப்பிய வீடியோ, சமந்தாவை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதனை, சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ, நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், சூப்பர் டீலக்ஸ், தெறி, ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களிலும் அசத்தியிருந்தார். தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் எப்போதும் தொடர்பிலேயே உள்ளார். தனது ஜம் ஒர்க்அவுட் உள்ளிட்ட அன்றாட நிகழ்ச்சிகளை, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் பதிவிட்டு வருகிறார். இதன்காரணமாக, ரசிகர்கள், சமந்தா உடன் தொடர்நட்பில் இருக்கும் சூழ்நிலை உள்ளது.

View this post on Instagram

Woww this is incredible @gods__kid ❤️ .. Thankyou ????

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

இந்நிலையில், சமந்தா எனும் பெயரையே, பல்வேறு கோணங்களில் எழுதி, சிரித்த முகத்துடன் கூடிய சமந்தாவின் உருவத்தை, ரசிகர் ஒருவர் உருவாக்கியுள்ளார். அதை சமந்தாவுக்கும் அனுப்பியிருந்த நிலையில், சமந்தா அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ போட்ட சிலமணிநேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளதோடு மட்டுமல்லாது, கமென்ட்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன.

நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி, அவரின் பிரத்யேக ஆடை உடனான போட்டோவும், சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்களிடம் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samantha art fans happiest moment

Next Story
”அது என்னோட கதை இல்ல” விஜய் ட்ரோலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கவிதா ஜவஹர்!Kavitha Jawahar on Bigil Audio Launch, Thalapathy Vijay
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com